சிவனின் அரிய விந்துவும் சக்தி நாதமும்

சிவனின் அறிய விந்துவும் சக்தி நாதமும்


நிலவைப்பெண் என்றுப் புலவர் பலரும்
கலக்கமின்றிப் பாடியது குற்றம்--- நிலவாண்
சூரியன்பெண் சக்தியென சூட்சமாய்ச் சொன்னவர்
நாரிய ரைத்துறந்த சித்து

தேயுப் பருதிசக்தி தேயாளென் றும்சிவன்
தேயும் நிலாச்சிவ சந்திரன்--- தேயா
வளர்பிறையில் கூடிக் களர்நிலத்தில் சூலாம்
துளிர்மண்ணில் பூமித்தா யும்.


தேய்ந்து மறையும் அமாவாசை தேயுவண்டாத்
தோயும் சிவவிந்து நீரன்று --- தேடுவர்
சித்தருடன் எத்தர் சிவவிந்தை சிந்தையாய்
அத்தனையும் பாழாகும் பார்

எழுதியவர் : (16-Aug-19, 4:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே