கெட்டுவிடாமல் வாழ

மாலைக் கொண்ட மலர் எல்லாம் மணம் வீசுமோ
மனித உருக்கொண்டோர் மனந்தோறும் காதல் புகுமோ
மாண்புமிக்கோர் வாழ்வு மாற்றவருக்கு வழிகோலுமோ
மனந்தூய்மையானோருக்கு மகத்துவம் கிட்டுமோ

விட்டு விலகா அன்பு இறுதிவரை வசமாகுமோ
கெட்டுவிடாமல் வாழ சொத்து சூழ்ந்துக் கொள்ளுமா
கட்டுக்கோப்போடே உடல் கெட்டிபட்டு நிலைக்குமோ
எவ்வுணவும் செரித்து இலகுவாக உரமாகுமோ

இவ்வுலக பயணம் அறுந்திடாமல் அமைதி காணுமோ
சினம் கொடுக்கா செயலே சிலாகித்து உடன் சூழுமோ
செங்குருதி சூடுன்றி செயல் திறனோடே ஓடுமோ
சேவை செய்து செழிப்படைய செல்வம் நம்மை சேருமோ

நிதர்சன வாழ்வுக்கு நிலையான வேலை அமையுமோ
நிறைந்த சொந்தம் நிம்மதி கெடுக்காமல் தொடருமோ
அறிவு மங்காமல் இறுதி யாத்திரை வசப்படுமோ
அவனியின் அனுபவம் அகக்கண்ணை திறக்க வைக்கட்டும்.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Aug-19, 7:19 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 64

மேலே