வாழ்க்கை ஒரு தவம்

வாழ்க்கை ஒரு தவம்🙏🏽

மாய வலையில் தினம் சிக்கி தவிக்கும் மானுடா
உன் மனம் ஒரு குரங்கு
அது மரத்துக்கு மரம் தாவும்.
பல மாற்றங்கள் உன்னிடம் வந்தது.
இருப்பினும் உன் பிறவி குணம் எப்போதும் மாறாது.
உன் மனம் விக்ரமாத்தியன் கதை தான்.
மீண்டும், மீண்டும் அது முருங்கை மரம் ஏறும்.

மாற்றி பேசுவதில் வல்லவன் நீ
காலையில் ஒரு பேச்சு
மாலையில் ஒரு பேச்சு
உன் நாக்குக்கு ஏது நரம்பு.
வண்ணம் மாறுவதில் பச்சோந்தியே உன்னிடம்
தோற்றுப்போகும்.

பல தவறுகள் செய்துவிட்டு
உன் தவறை மறைக்க
அதை நியாயப்படுத்துவாய்.
பிரச்சனையை ஒருவன் உன்னிடம் சொன்னால், அதற்கு அவனுக்கு தீர்வு கூறாமல், அதை செய்தியாக கேட்டு, ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்கிவிடுவாய்.

ஆசையின் அடிமையே
பேராசையின் பிள்ளையே
அனைத்தையும் அனுபவிக்க துடிக்கும் அற்ப பிறவியே
ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் உன்னை சுற்றி உள்ள ஐந்தறிவு ஜீவன்களை பார்.
அது எவ்வளவு மகிழ்ச்சியாக இயற்கையோடு சேர்ந்து வாழ்க்கையை பயணிக்கிறது.
அது தன் வாழ்க்கையை திரும்பி பார்பதில்லை.
வாழ்க்கையில் இலக்கும் வைத்திருப்பதில்லை
அந்த நேரம், அந்த நொடி அது தன் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்கிறது.
ஆறறிவு என்று தம்பட்டம் அடித்த கொள்கிறாயே
பறவைகளுக்கு உள்ள திறமை உனக்கு உள்ளதா.
பறக்கும் சக்தி உனக்கு தந்திருந்தால் இந்த உலகம் என்ன கதி ஆயிருக்குமோ.

கருவுற்ற தன் துனையை , குட்டி போடும் வரை தொடாது நான்கு கால் ஜீவன்கள்.
நீயோ பனிக்குடம் உடையும் வரை விட மாட்டாய்.

என்ன, உனக்கு சிரிக்க தெரியும்.
அதை கூட உண்மையாக, கள்ளம் கபடற்று என்றாவது ஒரு நாளேனும் சரித்திருப்பாயா?
இல்லையே.
மானுடா! மயங்காதே, மயக்கம் கொள்ளாதே
நீ படைக்கப்பட்ட நோக்கம்
என்னவென்று ஆராய்ந்து
ஆனந்தமாக வாழ வழி தேடு.
வாழ்க்கை ஒரு வரம்!
வாழ்க்கை ஒரு தவம்!
இன்பத்தை தவிர்த்து பேரின்பத்தை அடைய முயற்சி செய்.
வாழ்க்கையின் அரிச்சுவடியாவது தெரிய வரும்.

-பாலு.

எழுதியவர் : பாலு (17-Aug-19, 9:01 am)
சேர்த்தது : balu
பார்வை : 260

மேலே