மனதின் ஆற்றலே

செடி, கொடி, மரம்
தோன்றுவது விதையிலிருந்து
என்றும் மாறாத நிகழ்வு,
இவை அனைத்தின் மாற்றமும்
காலத்தின் தன்மையென்று
உணர்த்துகிறது

காலம் மாறுவதில்லை
மாற்றமே
காலத்தின் அடித்தளம்,
கிழக்கே உதிக்கும் ஆதவன்
மேற்கிலே மறைவதும்
மாறாத நிகழ்வு

பிறப்பிற்கும், இறப்பிற்கும்
இடையே நிகழும்
காலத்தின் மாற்றத்தால்
நாளொரு பொழுதும்
நாம் வளர்ந்துகொண்டுதான்
இருக்கிறோம்

காலமெனும் அநுபவத்தால்
முதுமைக்கு அறிவு கூடும்,
காலத்தின் பழமையால்
முதுமை மரியாதை பெறும்
வாழ்வைக் காக்கும் சக்தி
மனதின் ஆற்றலே.

எழுதியவர் : கோ. கணபதி. (18-Aug-19, 8:29 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 42

மேலே