பகலில் ஒரு அந்தி

விரிந்த வெளிர் நீல வானத்தில்
குளிர்க் காற்று வீசும்
விரிந்த பசும் புல்வெளியில்
பனித் துளிகள் கண்சிமிட்டும்
பனிக்குளிர் புல்வெளியில் கால்பதித்து நீ நடக்க
தமிழில் சொற்கள் கவி பயிலும்
விழியில் நாணம் திரை போட இமை கவியும்
பகலிலே ஒரு அந்தி சாயும் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-19, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : pakalil oru andhi
பார்வை : 86

மேலே