காதல்

எனோ நீ என்னோடு பேசாமல்
என்மனம் நோக மௌனத்தில் இருப்பினும்
உன் விழிகளுக்கு என்மேல் பச்சாதாபம்
என் விழியோடு உறவாடி பேச
உன் மனம் என் கண்ணில் தெரிந்தது
என் மனம் குளிர இனி எனக்கேன்
கவலை என்மீது நீ கொண்ட காதல்
உன் காந்த கண் பேசி தெரிவிக்க
இனி உன் மௌனம் கழியும் காலம்
காத்திருப்பேன் நான் இலவங்கிளிபோல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Aug-19, 11:46 am)
Tanglish : kaadhal
பார்வை : 217

மேலே