சிறகடிக்கும் நெஞ்சம்


தெவிட்டாதது உன் நிலாமுகம்
தேடும் கண்கள் தினமும்
அழகியுன் விழிக்குளத்தில்
ஆடிக்களிக்கும் கயல்கள்
இரட்டைக் கன்னங்கள்
இனிக்கும் தேன்கொய்யா
பேடு நீ பூமேடை
அதரங்கள் மலர் ரோஜா
பாடும் குயில்பாட்டு
பைந்தமிழை நீ மொழிந்தால்
ஆடும் முல்லை வாசம்
அழகி நீ அருகில் நின்றால்
கூடு விட்டு உன்னை நோக்கி
சிறகடிக்குதே நெஞ்சம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (18-Aug-19, 1:08 pm)
Tanglish : sirakadikkum nenjam
பார்வை : 241

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே