அவள்

காலைக் கதிரவன் கிரணங்கள் ஜன்னல் வழியே
இதமாய் வந்து தூங்கிக்கொண்டிருந்த என்னவள்
மீது வந்து வருடியது அவளும் மெல்ல விழிக்க
முனைந்தாள்.......ஒரு சிறு சோம்பல் மெத்தையில்
படுத்து கை கால்களை சற்றே முறித்து
கண் விழிக்க பார்க்கிறாள்....விழுதுகொண்ட நான்
அதை ரசிக்கிறேன்.... அதோ அவள் விழிகள்
இல்லை தாமரை மொட்டுக்கள் கதிரவன்
கிரணம் பட்டு மெல்ல இதழ்களை விரிக்க ...
இதோ முழுவதுமாய் வளர்ந்தது தாமரை
தாமரையாம் அவள் வண்ண கண்களிரண்டும்
அதைப் பார்த்து ரசித்தேன்....ஏன் எழுப்பாது
நீ விழ்த்துக்கொண்டாய் என்று செல்லமாய்
அவள் சினுங்க நான் சொன்னேன்,' தங்கமே
தங்கத்தாமரையாய் உன் விழிகள் மலரக்
கண்டேன் முழு தாமரையாய் .....அதில்
மயங்கிப்போய்விட்டேனடி என் செல்லமே
என்றேன்....; தாமரைக்கு கண்ணினாள்
மலர்க்குரிய நாணத்தோடு எழுந்து கொண்டாள்
என் ரசனைக்கு புண் சிரிப்பாள் அர்த்தபுஷ்டியோடு
நன்றி சொன்னாள் , குளியலறை நோக்கி அவள்.....
அவள் கண் அழகிலேயே மயங்கிக்கிடந்த
கருவண்டு நான் எழுந்தேன் , அடுத்து குளித்து
வந்து கோலம்போட வரும் அவள் அழகைகாண்பதற்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Aug-19, 2:44 pm)
Tanglish : aval
பார்வை : 219

மேலே