உழைப்பு

​குலத்தொழில் ஆனாலும் அதுவே
--​அறிந்தக் கைத்தொழில் ஆனாலும்
குறுக்குவழித் தேடாது பொருளீட்ட
--உழைத்து வாழ்வதே வாழ்வாகும் !

உயர்ந்திடும் எண்ணம் ஊற்றானால்
--செய்திடும் தொழிலும் கைகொடுத்து
உயர்த்திடும் நிலையை வையத்தில்
--பெருக்கிடும் உவகையை உள்ளத்தில் !

தேங்கும் ஏக்கங்கள் எவருக்குமுண்டு
--ஏற்றமும் இறக்கமும் என்றுமுண்டு​
​போட்டியும் தொழிலில் நிச்சயமுண்டு
--பொறுமைக் காத்தால் வெற்றியுண்டு !​


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Aug-19, 9:36 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 630

மேலே