புலம்பல்கள்

என் எண்ணப் பறவை
விண்னை நோக்கிப் பறந்து
புது சொல் எடுத்து பொருள்
அமைக்க வேண்டும்_அன்பே.

கொஞ்சம் அகற்றி விடு
உன் நினைவு என்னும்
மன விலங்கை....

விண்ணில் ஊடுருவி
நட்சத்திரங்களை எடுத்து
பாட்டு எழுத வேண்டும் _அன்பே.

கொஞ்சம் விலக்கி விடு
என் விழியை மறைத்திருக்கும்
உன் முகத்திரையை.....

தென்றலை உள்ளே இழுத்து
மூச்சாலே பேச்சு அமைத்து
நான் மேடை ஏற வேண்டும்_அன்பே

கொஞ்சம் மறைத்து விடு
என் நெஞ்சத்தில் மையல்
கொண்டுள்ள உன் பெயரை....

நான் இடம் பார்த்து தடம்
பதிர்த்து தொடு வானில்
மலர் எடுத்து மாலை தொடுக்க
வேண்டும் _அன்பே.

கொஞ்சம் உன் வீட்டுப் பாதையை
நாடும் என் பாதத்துக்குத் தடை
போட்டு விடு.....

உறுதியான குருதி இழந்து
என் இதயம் துடிப்பதை
மறந்து விட்டது _அன்பே.

குருதிப் புனலில் உன்
பாச உரை உறை போட்டு
விட்டது கொஞ்சம் கழட்டி விடு...

ஈருயிர் ஓர் உடலாக வாழ
வழி இல்லாது போனலும்
அன்பே.

ஈருடல் ஈருயிர் ஓர்
உணர்வோடு வாழ அனுமதி
உண்டோ......

இல்லையெனில் நான்
நானாக மாற வேண்டும்
அன்பே.

என்னுள் கலந்த உன்னை
அன்னப் பறவை போல்
கொஞ்சம் பிரித்து எடுத்து
விடு.............

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (20-Aug-19, 8:42 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 154

மேலே