போசன் அப்பியான்

பாட்டிம்மா நீங்க சொன்ன மாதிரியே என் மனைவி மலர்கொடிக்கு ரட்டை குழந்தைங்க பொறந்திருக்குதுங்க. என்ன பேருங்கள வைக்கிறதுன்னு நீங்களே சொல்லுங்க. நான் எட்டாம் வகுப்பில பல்டி அடிச்சு தோட்டத்தில கூலி வேலை செய்யறவன். என்னோட எட்டாம் வகுப்பு உங்க ரண்டாம் வகுப்புக்குக்கூட சமம் இல்லை.
@@@@@
அதெல்லாம் எனக்குத் தெரியும்டா பொன்னுச்சாமி. உன்னால ஒரு வாக்கியத்தைக்கூட தப்பு இல்லாம எழுத முடியாது. அதுகெடக்குது உடு. மலர்கொடிக்கு சிவனும் பார்வதியும் ஆசிர்வசித்து ரட்டைக் கொழந்தைங்க பொறந்திருக்கு.
கொழந்தைங்களுக்கு சுத்தமான இந்திப் பேருங்கள வைக்கிறதுதான் இப்பெல்லாம் நாகரிகம். சோசியகாரர்கிட்ட பேருங்கள கேக்கவேண்டாம். நானே சொல்லறேன்.
@@@@@
நீங்கதான் எந்த நேரமும் தொலைக்காட்சிப் பெட்டியே கதின்னு கெடக்கறீங்களே உங்களுக்குத் தெரியாத இந்திப் பேருங்களா? நீங்களே சொல்லுங்க.
@@@#
சரிடா பொன்னு. நேத்து ஒரு செய்தில 'போசன் அப்பியான்'னு சொன்னாங்க. இந்த ரண்டு வார்த்தைகளும் புதுமையா இருக்கு. பெண் கொழந்தைக்கு 'போசன்'னு (போஷன்) வச்சிடு. பையனுக்கு 'அப்பியான்'னு வச்சிடு. நம்ம ஊரில பிள்ளைங்களுக்கு யாருமே வைக்காத பேருங்கடா.
@@###
'போஷன்' 'அபியான்'அருமையான பேருங்க பாட்டிம்மா.
@#@##
பொறப்படுடா ஊராட்சிமன்றத்துக்கு பேருங்கள பதிவு பண்ண.
@####
இதோ இப்பவே போறேன் பாட்டிம்மா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆ ◆◆◆◆
Poshan = Nutrition
Abhiyaan = The Campaign

எழுதியவர் : மலர் (21-Aug-19, 10:20 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 92

மேலே