அவள்
தடாகத்தில் நீராடவந்தாள் மங்கை
அதிகாலை வேளை….புலர்ந்தும் புலரா நேரம்,
மங்கையவள் விழிகளைக்கண்டு அலர்ந்த
கமலமென்றே நினைத்து தடாகத் தாமரை மொட்டுக்கள்
கதிரவன் கிரணம் பட்டு மலர்ந்ததோ இத்தாமரை
என்றெண்ணி தம் இதழகை அவிழ்த்து விரிந்தன
பாவம் கதிரவன் ஏமார்ந்தான்!

