பிக்பாஸ் - அழுகாச்சி சீரியல்களின் கலவை

நண்பர் : நேற்றைய பிக்பாஸில் என்ன நடந்தது... இன்னும் நீ எழுதலையேப்பா..?



நான் : ஒண்ணுமே நடக்கலைய்யா... என்னத்தை எழுத...?



நண்பர் : ஒரு மணி நேரத்துக்கு எதாவது போட்டிருப்பாங்கள்ல அதைப் பற்றி எழுதுப்பா...



நான் : மொத்தச் சீரியலையும் கதம்பச் சோறாக்கி கண்ணீர் வடிய நம்மக்கிட்ட கொடுத்தானுங்க.... என்னத்தை எழுதுறதுன்னுதான் தெரியலை.



நண்பர் : அட ஏதாவது எழுதுப்பா...



நான் : சரி உங்க தலையெழுத்து... விதி வலியது...



'ஊர்வசி...ஊர்வசி... டேக் இட் ஈஸி ஊர்வசி' பாட்டைக் காலைச் சங்கொலியாப் போட்டனுங்க... சித்திரை வருசப் பொறப்புக்கு தேவகோட்டையில கரகாட்டம், நாடகம், ஆடல் பாடல், பாட்டுக் கச்சேரியின்னு தெருவுக்குத் தெரு நடப்பது மாதிரி ஆங்காங்கே நின்று ஆடினார்கள். பசங்க ஆட்டம் எப்பவும் போல் பார்க்கலாம் ரகம்... ஷெரினின் பாத்ரூம் ஆட்டம் பக்கா... கஸ்தூரி முழுசா மும்தாஜா மாறிட்டாங்க... இந்த ஆட்டத்தையெல்லாம் போட்டு பிள்ளைங்களை பய முறுத்திடாதீங்க பிக்பாஸ்.



வனிதா, தர்ஷன், சேரன் டைனிங்க் டேபிளில் உக்கார்ந்திருந்தாங்க...



வனிதா : பாசத்தைப் பிழிஞ்சி பாயாசமாக் கொடுத்தது போதும்... நீங்க சாப்பிடுங்க...



சேரன் : இல்ல அவ வருவா...



வனிதா : அவ கவின்கிட்ட பெர்மிசன் கேக்கப் போயிருக்கா... சின்சியரா வேலை பாக்குற மாதிரி சீனைப் போடுற டீம் லீடர் மாதிரி அவன் தின்னுக்கிட்டு இருக்கான்.



சேரன் : இல்ல அவ வருவா...



வனிதா : யோவ் தின்னு தொலைய்யா... ஆறிட்டா நாறிப்போவும்.



சேரன் : இல்ல அவ வருவா...



தர்ஷன் : ஏய்யா... பாசத்துல சிவாஜியை மிஞ்சிருவே போலவே.... அந்தச் சனியன் அங்க உக்காந்து கடலை போட்டுக்கிட்டு இருக்கு... நீ காத்துக்கிட்டு இருக்கே... தின்னு தொலை... பாச வண்டியை அப்புறம் இழுத்துக்கலாம்.



சேரன் : இல்ல அவ வருவா...



வனிதா : ம்க்கும் வந்துட்டாளும்...



தர்ஷன் : ஷெரின் டார்லிங் எனக்கு இன்னொரு பிளேட் உப்புமா கொடு.



வெளியில் கவின், லாஸ்லியா, முகன்...



கவின் : ஏய் அந்தாளு சாப்புடமா உக்காந்து சீனைப் போடுறான்... போ... போயிச் சாப்பிடு.



லாஸ்லியா : லூசுப்பய... அவன் தின்னாத் திங்கிறான்... திங்காட்டிப் போறான்... நீ ஊட்டு...



கவின் : அதான் கக்கூஸ்ல ஊட்டுனேனே..



லாஸ்லியா : லூசு... இப்ப உப்புமா ஊட்டு... அப்பறமா உதட்டுமா ஊட்டு...



கவின் : போப்பா என்னமோ நாந்தான் உன்னைய உக்கார வச்சிருக்க மாதிரி சீனைப்போடும் சைக்கிள்...



லாஸ்லியா : நீதானே வச்சிருக்கே...ஐ மீன் இங்க உக்கார வச்சிருக்கே.... சேரனோட சேர்ந்து சாப்பிடாதேன்னு...



கவின் : அதை எதுக்கு வெளிய சொல்றே...



லாஸ்லியா : அதான் எல்லாருக்கும் தெரியுமா?



முகன் : அடப்பாவி... என்னையும் அபியையும் உடைச்சி விட்டுட்டு உங்களுக்கு உதட்டுமாக் கேக்குதா...?



கவின் : மச்ச்ச்சான்ன்ன்ன்ன்...



முகன் : மூடுடா...



லாஸ்லியா : நான் போறேன்.



மீண்டும் உள்ளே...



சேரன் : வாம்மா... சாப்பிட...



லாஸ்லியா : சேரப்பா... நடிப்பு போரப்பா... நீ தின்னுப்பா...



கஸ்தூரி : சொன்னேன்ல்ல... அவ அங்க சாப்பிட்டா... பசிக்கலை போறும்ப்பாங்கிறா...



சேரன் : பாப்பா மேல சத்தியமா நடிக்கலை...



லாஸ்லியா : இது எனக்குப் பிடிக்கலை...



எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது கமலின் வாக்கு ஆனாலும் நாமனேசனில் மட்டும் நாம நினைப்பதுதான் நடக்கும்... அவென்ஞ்சர்ஸ் அணிக்கு சேரன், கஸ்தூரி மற்றவர்களுக்கு சாண்டி, தர்ஷன்... கவின் தப்பித்தான்... இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாதென வனிதாவை பிக்பாஸ் பாதுகாத்துக் கொண்டார்.



சேரன் : லாஸ் என்னையப் பண்ணமாட்டா....



கஸ்தூரி : உங்களைத்தான் பண்ணுவான்னு என் மண்டைக்குள்ள டுவிட் ஓடுது...



சேரன் : மாட்டா... அவ எம்மக...



கஸ்தூரி : யோவ்... அம்பது நாள்ல பழகிட்டு மக போட்டு ஆட்டுறே...



லாஸ்லியா : சேரப்பா மேல சேறை வாரியிறைக்கிறேன்... ஸாரி... நாமினேட் பண்ணுறேன்.



பிக்பாஸ் : யோசிச்சிச் சொல்லுங்க லாஸ்லியா இது இறுதி முடிவா?



லாஸ்லியா : இது கவினுக்காக எடுத்த உறுதியான முடிவு... கவினுக்கு எதிரி எனக்கும் எதிரி...



ஒரு வழியா நாலு பேருன்னு முடிவானதும் சேரன் அப்செட்... சாண்டி ஆனந்தம்...



படுக்கை அறைக்குள்...



லாஸ்லியா : நான் சேரப்பாவ நாமினேட் பண்ணுனது தப்புத்தானே... (அழுகிறார்).



கவின் : அப்ப பண்ணிட்டியா..?



லாஸ்லியா : நீதானே பண்ணச் சொன்னே...



கவின் : அதான் அப்பப் பண்ணிட்டியா...?



லாஸ்லியா : அதுக்குத்தான் அழுறேன்னு புரியலையா..?



கவின் : சீனைப் போடுறேன்னு நினைச்சேன்.



தர்ஷன் : என்னவாம்...?



கவின் : அவ அப்பனுக்கு ஆப்படிச்சிட்டாளாம்...



தர்ஷன் : தப்பில்லையே.



கவின் : நாங்க பேசும் போது நீ குறுக்க வர்றதுதான் தப்பு.



கஸ்தூரி : என்ன இங்க சத்தம்... என்ன இங்க சத்தம்...



சாண்டி : பொங்கலுக்கு பருப்பு வாங்கணுமாம்...



கஸ்தூரி : லாஸ் ஏதோ சேரப்பா.. நாமினேசன்னு...



சாண்டி : ஒண்ணுமில்ல... அவ கண்ணுல தூசி... அதான் கவின் ஊதி எடுக்கிறான்...



கஸ்தூரி : கவின் ஊட்டியில்ல விடுவான்... ஊதியும் எடுப்பானா...



லாஸ்லியா : நீ போத்தா.. இது எங்க குடும்பப் பிரச்சினை...



இதுக்கு அப்புறம்தான் பிக்பாஸ் சீரியல்களின் அழுகைகளை எல்லாம் அள்ளிப் போட்டு பெரிய சோக நாடகத்தை அரங்கேற்றினார். கருத்து அறைக்குள் டிஸ்யூ பேப்பர், கிளிசரின் எல்லாம் வச்சி அழுதாத்தான் காசுன்னு சொல்லிட்டார்... அவனவன் அழுதுக்கிட்டோ... அழுதுட்டுப் பேசியோ அல்லது பேசிட்டு அழுதோ மக்களைச் சோகத்தில் ஆழ்த்தனும்ன்னு சொல்லிட்டார். எல்லாரும் போட்டி போட்டி கேவிக்கேவி அழுதாங்க...



வருசக்கணக்காக பிரிஞ்சிருக்க நாங்கள்லாம் குடும்ப பிரிவுத்துயர் பிள்ளைங்க நினைப்புல அழுதா வீட்டுல சும்மா சீனைப் போடாதீங்க... நாங்க பக்கத்துல இல்லைன்னு திங்காம, தூங்காமயா இருக்கீங்க... நல்லாத்தானே சிக்கன் பிரியாணியைத் தின்னுட்டு கெடந்து உறங்குறீங்கன்னு திட்டுறாங்க... ஒரு ரெண்டு மாசம் பிரிஞ்சிருக்க மாட்டானுங்களாம்.... கொட்டித் தீர்த்தானுங்க... அழுகை வராத தர்ஷனையெல்லாம் அழுற வரைக்கும் விடவேயில்லை பிக்பாஸ்.... மக்கள் மனசுல வருத்தத்தை விதைக்கிறாராம் பிக்பாஸ்... கொடூரமானவன்யா நீ.



மறுபடியும் கிச்சன் வாஷ்பேசனருகில்...



லாஸ்லியா : அதான் நீ சொன்னபடி அந்தாளுக்கு குத்திட்டேனுல்ல... இன்னும் ஏன் தேவாங்காட்டம் இருக்கே...?



கவின் : விடு எம்முகமே அப்படித்தான்...



லாஸ்லியா : சொல்லு என்ன பிரச்சினை..?



கவின் : அந்தாள நான் மாமான்னு கூப்பிடுறதுதான் பிரச்சினை...



லாஸ்லியா : உன்னை யார் கூப்பிடச் சொன்னா...



கவின் : தத்தியா நீ உனக்கு அப்பன்னா எனக்கு மாமந்தானே..



லாஸ்லியா : .....



கவின் : என்னாச்சு...



லாஸ்லியா : ப்ச்...



கவின் : அப்ப இச் கொடு.



வெளியே-



தர்ஷன் : என்ன சண்டை உங்களுக்குள்ள..?



லாஸ்லியா : தனியா கழுவிக்கிக்கிட்டு இருந்தான்... பக்கத்துல நின்னதுக்கு என்னையக் கறுவுறான்...



சாண்டி : போ நீ போய் கழுவு.... (பாடலாய்)



லாஸ்லியா : அதான் திட்டுறானே...



தர்ஷன் : நீ கொட்டு.



லாஸ்லியா : சேரப்பாதான் அவனுக்கு சேர்மானம் ஆகுதில்லையாம்... வாந்தி வாந்தியா வருதாம்...



சாண்டி : அப்ப நீ அவனையும் கழுவு... அப்படியே உங்கப்பனைக் கை கழுவு.... (பாடலாய்)



லாஸ்லியா : போன வாரமே கழுவிட்டாலும் செருப்புல ஒட்டுன பப்ளிக்காம் மாதிரி படுத்தி எடுக்குறாரே...



சாண்டி : செருப்பு அருவெறுப்புன்னு சொல்லி... தள்ளி வையி.



அவெஞ்சர்ஸை உடைத்தால்தான் நாம் இந்த வாரம் நிம்மதியாத் தூங்க முடியும்ன்னு வனிதா, கஸ்தூரி, சேரன் பேசிக்கிட்டு இருக்காங்க... வனிதா கூட்டணியின் முதுகெலும்பை உடைக்கணுங்கிறார்.... கஸ்தூரி எது வசவசத்த கேசோ (கவின்) அதை ஓடச்சாப் போதும்... பிக்பாஸ் மட்டும் இப்ப ஒரு அழகிய உள்ளே அனுப்பினாப் போதும் எலும்புத் துண்டைப் பார்த்த நாய் மாதிரி ஓடியாந்துருவான்... அப்ப லாஸ் லாஸாயிட்டு அப்பாக்கிட்ட வந்திரும்.... நம்ம திட்டம் சக்சஸ் ஆகும்.



சேரன் : உங்க திட்டம் நல்லாத்தான் இருக்கு... ஆனா இந்தத் தப்பெல்லாம் நாம செய்யக்கூடாது.... மக்கள் பார்த்துக்கிட்டுத்தானே இருக்காங்க.... அதுவாகவே நடக்கும்.



கஸ்தூரி : திட்டம் போடாம... செயல் படுத்தாம... ஆட்சி அடுத்த வாரம் கலையும்ன்னு எதிர்க்கட்சித் தலைவர் சொல்ற மாதிரியிருக்கு உங்க பேச்சு.



சேரன் : இல்லம்மா... நமக்குன்னு ஒரு நேர்மையிருக்குல்ல...



வனிதா : அதத் தூக்கி குப்பையில போடுங்க... கவினைத் தூக்கி கப்போர்டுல போடுங்க... சாண்டியை சாக்குல கட்டுங்க...



சேரன் : டி.ஆர் மாதிரி நீங்க பேசிட்டுப் போயிடுவீங்க... வனிதா இளிச்சிக்கிட்டு அவனுககிட்ட போயிப் பேசி நல்லவளாயிருவே.... கஸ்தூரிக்கிட்ட அவனுங்க வரமாட்டானுங்க... மாட்டுக்காரனுக்கு மாட்டுன தொத்த மாடு மாதிரி என்னோட எலும்பையில்ல உடைப்பானுங்க...



விளக்கணைத்த பின் சோபாவில் கவினும் லாஸூம்...



கவின் : நீ உங்கப்பனுக்கிட்ட ஒட்டிக்கிட்டதெல்லாம் சரிதான்...



லாஸ்லியா : அப்புறம் என்னதாங்க உங்க பிரச்சினை.... சொல்லித் தொலைங்களேன்...



கவின் : அதான்... நீ உங்கப்பனுக்கிட்ட ஒட்டிக்கிட்டதெல்லாம் சரிதான்..



லாஸ்லியா : இப்ப என்ன எதிர்பார்க்குறீங்க... உங்களைக் கட்டிக்கணுமா..?



கவின் : இல்ல நீ...



லாஸ்லியா : யோவ் சொல்லுய்யா... உனக்கு என்னதாய்யா பிரச்சினை...?



கவின் : கமல் சார் ஒரு மனுசனாடி... அந்தாளுக்கிட்ட சாரி கேக்குற உங்கப்பனுக்கு எங்ககிட்ட சாரி கேக்கணும்ன்னு தோணலையா..?



லாஸ்லியா : ஓ லாஜிக்காத்தான் பேசுறீங்க... பட் அவரு பெரியமனுசன்தானே விட்டுட்டு வேலையைப் பாருங்க...



கவின் (மனசுக்குள்) : என் வேலையே கேப்புல எல்லாம் சேரப்பாவை வெட்டுறதுதான்னு உனக்குத் தெரியாத வரைக்கும்தான் நான் ஜிகர்தண்டா சாப்பிட முடியும்...



கவின் (சத்தமாய்) : வெட்டுக்குத்து நடக்கும் போது பெரிய மனுசன் வெண்டக்காய்தான் வெட்டுவானா..?



லாஸ்லியா : இப்ப எழுப்பி சாரி கேக்கச் சொல்லவா..?



கவின் : காலையில அந்தாளுக்கிட்ட குட்மார்னிங் சொல்லாதே... அம்புட்டுத்தான்.. அப்புறம் ஏம்மான்னு கருவக்காய்க்கு பின்னால வர்ற ஆடு மாதிரி வருவானுல்ல... அப்ப வச்சிக்கலாம் கச்சேரியை...



வெளியே...



சாண்டி : என்ன கஸ்தூரி நாளைக்கு யாரை வம்பிழுக்கலாம்ன்னு திட்டமெல்லாம் தீட்டியாச்சா?



கஸ்தூரி : அதுல பாரு சாண்டி...



சாண்டி : ராத்திரியிலயும் நீ சீமான் கணக்கா சீரியஸாப் பேச ஆரம்பிக்கிறே... போய்ப் படு... நாளைக்கு களமாடணுமில்ல...



கஸ்தூரி : ஓகே... யாரை உடைக்கலாம்ன்னு படுத்து யோசிச்சா பத்து சாய்ஸ் வரும்ல்ல...



சாண்டி : யோசி... யோசி... பத்து இல்ல பத்தாயிரமே வரும்.... ஆனா காலையில மட்டும் ஆடாதே...



கஸ்தூரி : நீங்க ரசிக்கலையா இந்த ஊர்வசியை... (அபிநயம் பிடிக்கிறார்)



சாண்டி : ரொம்ப ரசிச்ச்ச்ச்சேன்... இப்ப ஆடிறாதேத்தா....



கவினும் லாஸூம் வெளியில் வந்து அமர...



கவின் : அண்ணே இங்க வா...



சாண்டி : நான் அண்ணன்தானேடா மாமா இல்லையே... உன் மாமா உள்ளே தூங்குகிறாரே...



கவின் : இப்ப எதுக்கு அந்தாளை இழுக்குறே... நீ வா..



சாண்டி : இருட்டுக்குள் உருட்டுவதே உன் வேலையாகிவிட்டது.



கவின் : இப்பத்தான் எவ தொந்தரவும் இல்லாம இருக்கோம்.... நீ வேற ஏண்ணே...



சாண்டி : ராத்திரி ஆட்டங்கள்தானே உனக்கு ரத்தம் வரும்வரை அடி வாங்கிக் கொடுத்தது... இன்னும் திருந்தலையே நீ....



லாஸ்லியா : உனக்கென்ன பிரச்சினை... நாங்க லவ்வுனா...



சாண்டி : லவ்வுங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை.... ராத்திரியில் ரகசியம் எதற்கு... பார்ப்பவர்கள் பார்வையில் பரவசம் ஏற்படுமல்லவா?



கவின் : அவனுங்க கிடக்கானுங்க... இந்த நேரம்தான் ஊட்டவும் உருட்டவும் வசதியாக இருக்கிறது.



சாண்டி : நீ திருந்தமாட்டே... ஏய் நீ உள்ள போ... படு... பொம்பளப்புள்ள இருட்டுக்குள்ள உக்காந்துக்கிட்டு... அவங்கூட இருக்குறது... அப்புறம் அவன் அதை ஊட்டிட்டான்... இதை ஊட்டிட்டான்னு கமலுக்கிட்ட நாடகமாட வேண்டியது... ஊட்டும் போது எவளாச்சும் வேண்டான்னு சொன்னியளாடி...



லாஸ்லியா : அந்தாளு பாசத்துல கொல்லுறான்... இவன் நம்ம நேசத்தைக் கொல்லுறான்.



கவின் : எனக்கு மாமன் எதிரி... உனக்கு மச்சான் எதிரி... விடு... அண்ணனை அணைத்து நாளை இரவு நமக்கு காவல் இருக்கும்படி செய்கிறேன்...



லாஸ்லியா : வருகிறேன்... வாடிய இதயத்துடன்.



சாண்டி : தம்பி சித்தப்பு உனக்கு பாதுகாப்பா இருந்தாரு... இப்ப நானிருக்கேன்... நீ நள்ளிரவு பாசத்தைக் குறைச்சிக்க.. அம்புடுத்தான்.



கவின் : விடுண்ணே... கிடைக்கும் போது காவிரியில குளிச்சிக்கிறேண்ணே... சரி வா... படுக்கலாம்.



கொசுறு :

லாஸ்லியா மீது சேரன் அதிகமான பாசம் காட்டுவது அவ்வளவு ஒன்றும் நல்லதல்ல... லாஸ்லியா இப்போது வேறு பாதையில்... வேறு பயணத்தில்... இதற்குள் இடைப்பட்டு தன் மானத்தை இழப்பது தேவையில்லாதது என்பதை சேரன் புரிந்து கொள்ள வேண்டும்... செய்வாரா..?


கவினை வா, போ என்று அழைத்த லாஸ்லியா வாங்க, போங்க போட ஆரம்பித்திருப்பதில் தெரிகிறது அந்தக் காதல் எதை நோக்கிப் போகிறதென்பது... லாஸ்லியாவைப் பொறுத்தவரை உண்மையான காதலாக இருக்கலாம்... ஆனால் கவின்...?


அபி போனதும் முகன் மனசொடிந்துதான் இருக்கிறான்... நட்பையும் தாண்டிய ஒன்று இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.


கவினைப் பொறுத்தவரை சேரன் மீது சேற்றை வாரி இறைப்பது மட்டுமே தன் கொள்கையாய் வைத்திருக்கிறான்... சேரன் போய்விட்டால் நிம்மதியாவான்... இந்த வாரம் சேரன் போவாரா..?




பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (22-Aug-19, 3:14 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 75

சிறந்த கட்டுரைகள்

மேலே