பெண்ணும் மல்லிகைப்பூவும்

மல்லிகைப்பூவே, மல்லைகைப்பூவே நீ மட்டும்
மலரும் பூவாய் வீட்டின் கொடிமேல்
நகரத்து வீட்டு கொடிமேல் பூத்திருக்க
மலரே உன்னைப் பேணி வளர்ப்பார் உண்டு
மாட்டு சாணமும் ஆட்டு சாணமும்
கலந்து மண்ணிற்கு எருவாக்கி நீ
பொங்கி பூத்துக் குலுங்க இவர்கள்
உன்னைக் காப்பர்- ஆனால் மலரே
மல்லிகையே நீ ஏன் இங்கு காட்டு
மல்லியாய்ப் பூத்து வீணே இந்த
காட்டிற்கு மனம் சேர்கிறாய் இங்கு
காட்டு மல்லியே உன்னைக்கண்டு
மயங்கார் யாரும் உன் வாசம் கண்டும்
குரங்கின் காலும் கையும் உன்னை
மிதித்து வீணே அழித்திடும்………

மல்லியே நீ நகரத்து வீட்டின் கொடி மல்லியாய்
இல்லை தோட்டத்து மல்லியாய் இருந்து விடு
கோவில் பெருமாளுக்கும் பெருந்தேவிக்கும்
வாச மிகு மாலையாய் நீ இருந்திடலாம்
மணமக்களுக்கு மாலையாய் , பின்
தேன் நிலவில் மணமக்கள் மஞ்சத்தில்
அலங்கார வாசனைப்பூவாய் .

பெண்ணும் பூவும் ஒன்றே …
முகவரியோடு வாழ்ந்திட அவள் நகரத்து
வீட்டின் கொடி மல்லி ……
முகவரியின்றி வாழ்ந்தால் காட்டில் காட்டு மல்லி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Aug-19, 4:56 pm)
பார்வை : 113

மேலே