அரசு விடுமுறையும் அல்லோகல பயணமும்

கனவு காணுங்கள் கண்டிப்பாய் நிறைவேறும்
பத்தாவது படிப்பைக்கூட பணங்கறக்கும் பள்ளியில்
சென்னையில் செருப்புத்தைத்து சேலத்தில் படிக்க
சேர்த்த பணமெல்லாம் மக்களுக்கு செலவழிக்க

எங்கள் எண்ணமெல்லாம் அவர்கள் மருத்துவராய்
எம்மக்களின் எண்ணமோ எல்லோரும் சேர்ந்து வாழ
எல்லா விடுமுறையிலும் அவர்கள் எம்மை எதிர்பார்க்க
எவ்வளவோ பதைபதைப்பு எங்களுக்குள் தோன்றியது

உருவம் குறுகியதென்றாலும் உள்ளம் உருகுவதாய்
உழைத்தப் பணத்தை எடுத்து வந்து அவர்களுக்கு
பிடித்த பொருளை வாங்கித்தந்து கொடுத்தபோது
அகமகிழ்ந்து சிலிர்த்ததை கண்டு நெகிழ்ந்தோம்

மூன்று நாள் தொடர் விடுமுறை மாதம் ஒரு முறை வர
மூன்று கடிதங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல
மூன்று நாட்களாய் தொடர்ந்து பள்ளியிலிருந்து வர
மூன்று வேளை உணவோடு ஓடி ஏறினோம் பேருந்து

அவர்களை அழைத்து வந்து பேருந்து ஏற வந்தால்
அத்தனையிலும் அசுரக்கூட்டம் அபாரமாய் வழிய
ஏறவே வழியின்றி எல்லாபுறமும் ஓடி ஓடி ஓய
எங்கும் கூட்டமாய் ஏன் இங்கு வந்தோமென எண்ண

அல்லோகலமாய் நல்ல நிலைமை அப்பட்டமாய் மாற
ஆசையே அத்தனைக்கும் காரணமாய் ஆட்டிவித்தது
- - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Aug-19, 9:01 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே