குறுந்தொகை குறிஞ்சித்திணை 119 வது பாடல்

பாடல் காட்சி “இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.-

பாங்கன் தோழன் ,

தலைவி தன்னை வருத்தியது எப்படி என்பதைத் தலைவன் தன் பாங்கனிடம் சொல்வதுதான் இந்தப் பாட்டு..

இயற்கைப் புணர்ச்சி - கண்டதும் காதல் love at first sight

இப்படலை எழுதியவர் : சத்திநாதனார்

இவரது இந்தப் பாடல் ஒன்றே ஒன்று மட்டும்தான் சங்கநூல் தொகுப்பில் உள்ளது

விளக்கம்

சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே

தலைவி எப்படி தலைவினை வருத்தி இருக்காங்கன்னா

சிறு வெள் அரவின் - சிறிய வெள்ளிய பாம்பினது

அவ் வரிக் - அழகிய கோடுகளையுடைய,

குருளை – குட்டியானது

இந்த பாம்பை கோதுமை நாகம் னு நாம இப்ப சொல்லுறோம்

கான யானை - காட்டுயானையை

அணங்கி யாங்கு - வருத்தினாற் போல
அணங்குதல் = அச்சம் கொள்ளும்படி வருத்துதல்.



முளை வாள் எயிற்றள் - நாணல் முளையைப் போன்ற ஒளியை உடைய பற்களை உடைய
வளையுடைக் கையள் - வளையலை அணிந்த கைகளை உடைய

இளையள் - இளமையான - தலைவி

எம் அணங்கியோளே - என்னை வருத்தினாள்

இதை எப்படி உவமையாக பார்க்கலாம்னா

இளைய பாம்புக்குட்டியானது, பிறருக்கு அடங்காது திரியும் யானையைத் தீண்டி வருத்தியது போல, இளமையை உடைய தலைவி பகைவரால் தோல்வியுறாத என்னை வருத்தினாள் .


இப்ப பாட்டை மறுபடியும் பாக்கலாம்

சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே

எழுதியவர் : பாவி (23-Aug-19, 8:09 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 135

மேலே