அவள் வருவாளா

அவள் வருவாளா?
=====================================ருத்ரா

அவள்
வருவாளா?
காத்திருந்தேன்
மெரீனா கடற்கரையில்.
ஒரு காகிதம் கிடைத்தது
சில சொற்களுடன்
என்னவோ காதல் சிற்பி
என்ற பெயரில்
யாரோ எழுதிய கவிதை.
என்னத்தை
எழுதியிருக்கப்போகிறான்.
அலட்சியமாக
அதை எறிய
சுருட்டிக்கசக்கினேன்.
அதிலிருந்து குப்பென்று
ஒரு மணம்..
ஆவலுடன் பிரித்தேன்.
ஆஹா!
அது தேங்கா மாங்கா பட்டாணி
சுண்டல் இருந்த மணம்.

============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (23-Aug-19, 10:52 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 225

மேலே