இதயம் அமர்ந்தாள்

குயில்கள் சப்தம்
அவளின் குரல்
முல்லைத் தென்றல்
மணக்கும் தேகம்
அசையும் மேகம்
கலையும் கூந்தல்
வெடித்தது மாதுழை
சிரித்தாள் செவ்விதழால்
நங்கூரமிட்டது கப்பல்
வாகாய் நெஞ்சில்
வந்து குடிபுகுந்தாள்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (24-Aug-19, 12:05 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : ithayam amarnthal
பார்வை : 197

மேலே