மற்றுமோர் கண்ணன் பாட்டு
வெண்ணை வைத்தேன் கட்டித் தயிரும்
என் அப்பனுக்கு குருவாயூரப்பனுக்கு இன்னும்
நெய் அப்பமும், உப்புசீடையும் வெல்லச்சீடையும்
அக்காரடிசலும் தேன்குழல் என்று பலகாரமுடன்
அவன் விரும்பும் நாவற்பழமும் விளாமும் மற்றும்
கணத்தில் மட்டுமே காய்க்கும் பிரம்பு பழமும்;
ரோகிணியில் தேவகி பெற்றெடுக்க கோகுலத்தில்
நந்த யசோதை திருமகனாய் உதித்த
மாயனை, கோபால கிருட்டிணனை இன்று
பிள்ளைகளுடன் பரிவாரமாய் வந்து வாயால்
அவன் ஆயிர நாமம் பாடி பல்லாண்டிசைத்து
துதிப்போம் அவன் எம் வல்வினைகளெல்லாம் போக்கி
நல்வினை நல்கி எம்மை தீதிலா நல்லோராய்
வாழவைக்க இவ்வையகத்தில் வாழ்வுள்ளவரை