மழையும் உழவனும்

மழையில் சிலருக்கு
நனைய ஆசை
உழவனுக்கோ நனைக்க ஆசை...

பயிர்கள் சிரிக்கிறது
உழவனும் சிரிக்கிறான்
மழையின் வருகையால்

வாழும்போதே தன்னுயிரை
மண்ணில் புதைக்கிறான்
உழவன் பயிர்களின் வடிவில்

உழவன்
பயிரை உயிராக
உயிரை பயிராக பாவிக்கிறான்
பயிர் கருகும்போது
அவன் உயிரும் கருகிப்போகிறது..

உழவனின் வயிற்றுத்தீயை
அனையுங்கள்
தவறினால் நாளை அது
தேசத்தையே அழித்துவிடும்...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Aug-19, 8:51 am)
பார்வை : 112

மேலே