அவள் ஒரு கேள்விக்குறி - இரண்டு

அவள் ஒரு கேள்விக்குறி - 2சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் வந்தாள் அர்ச்சனா ...அவளை முதன்முதலாய் கண்ட நாள் ..

அழகு அர்ச்சனா
மாடர்ன் உடையில் நயன்தாரா
குடைக்குள் மழையிவள்
நிலவும் அர்ச்சனாவும்
ஒன்று தான் ..
நிலவு ஒளிர்ந்திருக்கும்
இவள்
அழகில் மிளிர்ந்திருப்பாள்
நிலவுக்கு மாதத்தில் ஒரு நாள் தான்
பௌர்ணமி
இவள் முகம் என்றுமே
பௌர்ணமி

அவளைக் கண்டு திரும்பிய தலைகள் மீண்டும் திரும்பாமல் நின்றன ...கொடி இடைக்கும்
பொடி நடைக்கும்
அவள் ஒரு முன்னுதாரணம்
அழகும் தமிழும்
அமுதும் தேனுமாய் கலந்தவள் ..
வைத்த கண்ணை எடுக்காமல்
பார்ப்பதோ ஆண்களுக்கு எப்பொழுதாவது ஏற்படும் தருணமிது
தாராவின் வடிவில் அது தினம் தினம் உண்டு
நொடிக்கு நொடி
அவளைக் காணாத பொழுதில்லையே
இமைக்காமல் பார்க்க வெக்கமாக இல்லையோ
கேட்க நண்பனும் இமைமறந்து பார்த்தால்
அவள் தேவதை இல்லாமல் வேறு யார்?தசரா நேரத்தில் பள்ளியில் சேர்ந்திருப்பாள் போல

அருகே முதிர்ச்சி

தூரக்கவர்ச்சி அவள்

அவள் டிபார்ட்மென்ட் நான்கு ஐந்து ஆண் ஆசிரியர்களிடம் நிறைய கூத்தடிப்பாள்

விளையாட்டாக ரொம்ப பேசுவாள்

வயது வித்யாசம் பார்க்காமல் நன்றாகப் பழகுவாள்

சிடுமூஞ்சி வழுக்குமண்டை ஆசிரியரிடமும் காரில் அருகே ஊர் சுற்றவும் செய்வாள்.

நட்பின் மீது நல்ல நம்பிக்கை கொண்டவள்

அவளின் மீது நல்ல தன்னம்பிக்கையும்

அசராத துணிச்சலும் கொண்டவள்.

புதிதாக வந்து அவர்களிடமே பாடம் மெதுவாக கற்றுக்கொண்டாள்.

அவர்களுடன் தான் வெளியே டீக்கடைக்கு டீ மற்றும் உணவு அருந்த செல்வாள்.

இப்படியே அவர்கள் கூத்து ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமானது

அவள் கூட்டத்திலேயே ஒரு சிடுமூஞ்சி அவளை எபோழுதும் சீண்டிக் கொண்டே இருந்தான்

அவன் திமிர் பிடித்தவன்.யாருக்கும் அவனைப் பிடிக்காது என்பதே உண்மை.

அவளும் வயதிலும் வேளையிலும் மூத்தவன் என பொறுத்தே போனாள்.

அவளை வேளைக்கு சேர்த்த சின்ன வாத்தியையே அவன் வேலையை விட்டு தூக்கினான்.

அவளுக்கு உள்ளுக்குள் அது பெரிய கோபம்.

ஏற்கனவே அவளை துன்புறுத்துகிறான் வார்த்தைகளால். .

நண்பனை வேறு வேலை செய்யவில்லை என தூங்கிவிட்டான்.

அவன் ஒரு சைக்கோ என அவள் உள் மனதில் பதிந்துவிட்டது.

தான் முன்னேற ஒரு பெரிய தடை அவன் .ஒரு காண்டாமிருகம் அவன் ,சிரிக்கவும் மாட்டான் ,

முகபாவனை கிடையாது ,யாருக்கும் அவனைப் பிடிக்காது.

அவன் மேல் பல புகார்கள் உள்ளன.

திடீரென்று ஏதோ ஒரு புகாரில் சிக்கிக்கொண்டான் அவன். வசமாக மாட்டியவன் ஒழிந்தான் .

ஊருக்கே தீபாவளி. இவள் மட்டும் கொண்டாடமாட்டாளா என்ன ?

எழுதியவர் : kaviraja (25-Aug-19, 12:13 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 172

மேலே