பிக்பாஸ் - சேரனை விடாது கருப்பு

வியாழக்கிழமை பிக்பாஸ்ல பூகம்பம் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது... என்ன பூகம்பம்...? அது வெடித்ததா...?காலையில 'யாரு கோமாளி'ங்கிற பாட்டைப் போட்டாரு பிக்பாஸ்... வேற யாரு நாமதான் கோமாளியின்னு நினைச்சிக்கிட்டுப் பார்த்தா எப்பவும் போல சாண்டி அன் கோ அசத்தல் ஆட்டம்... கஸ்தூரி... இந்தம்மா லூசா இல்ல லூசு மாதிரி நடிக்காதான்னே தெரியலை... கருமாந்திரமா ஒரு ஆட்டம்.அப்புறம் எப்பவும் போல காலைக்கடனாய் ஒருத்தவங்க எல்லாருக்கும் எதாவது ஒரு தலைப்பில் சொல்லும் டாஸ்க்... இன்னைக்கு கஸ்தூரி, பேச ஆரம்பிக்கும் போதே என்ன ஏழரையை இழுக்கப் போறாங்களோன்னு எல்லார் முகத்திலும் சந்தேக கோடுகள்... நமக்கும்தான்... ஷெரினையும் அவரின் நாயையும் வைத்து மொக்கைச் ஜோக் சொல்றேன்னு நாயைக் கொன்னு வெத்துப் பாத்திரத்துல போட்டு 'EMPTY VESSELS MAKE MORE NOISE' அப்படிங்கிறதைத் தமிழ்ப்படுத்தி 'எம்ப்டி வெசல்ஸ் மேக் மோர் நாய்ஸ்'ன்னு சொல்லி, ஷெரினை காலையிலயே அழ வச்சிட்டாங்க... உடனே வனிதா சண்டைக்குப் போக, என்னய்யா சொன்னேன்... ஒரு நாய்க்குப் பதிலா ஓராயிரம் நாய் வருதுன்னு பாஸிட்டாவாத்தானே சொன்னேன்னு சொல்ல, அதான் உன்னைய எம்ப்டி வெசல்ஸ்ன்னு சொல்லிட்டியேன்னு வனிதா ஷெரின் பின்னாடி போனாங்க... எதாவது அடிதடிக்கு ஆப்புடுதான்னு பார்க்க... கஸ்தூரி நான் இப்பப் போய் பேசவான்னு கேக்க, எல்லாரும் ஆத்தா... தாயி... அடக்கி வாசி... உனக்கு என்ன எழவு பேசுறோம்ன்னே தெரியலை... மறுபடியும் கிளப்பாதேன்னு சொல்லிட்டாங்க.வனிதா சமையல் பண்ணிக்கிட்டு இருக்கும் போது அங்க எதோ வெட்டிக்கிட்டு இருந்த கஸ்தூரி, தும்மல் வந்ததும் தள்ளிப் போய் கை வைத்து மறைத்துத் தும்மாமல் தோள்பட்டைப் பக்கமாய் முகத்தைச் சாய்த்து தும்மிவிட்டு வந்து வேலையைத் தொடர, தும்மல் பண்ணிட்டு கை கழுவாம வெட்டுறே... நான் சமைக்க மாட்டேன்னு கத்த, இது மெடிக்கலி அப்ரூவ்டு தும்மல்... உனக்குத் தெரியாதான்னு கஸ்தூரி கவிபாட, வெளியில் வந்த வனிதா அவ அப்படியே தும்மிட்டு கையைக் கழுவாம காய்வெட்டுறான்னு சொல்லி, ஷெரின்கிட்டப் போயி நான் சமைச்சிக்கிட்டு இருக்கேன்... பக்கத்துல வந்து தும்முறா... கை கழுவாம வெட்டுறா... என்னால சமைக்க முடியாதுன்னு... களவாணி படத்துல பஞ்சாயத்து பால்டாயில குடிச்ச கதை எப்படி ஒவ்வொருவரா மாறி கடைசியில வேற மாதிரி போற மாதிரி வனிதா வத்திக்குச்சி பத்தவச்சாங்க.... வனிதா பேசும்போதே அங்க வந்த கஸ்தூரிக்கிட்ட ஒரு வார்த்தையில் பிரச்சினையைச் சொல்லி முடிச்சிட்டாங்க ஷெரின்.... தலைவி செம்ம... தக்காளிக்குப் பிரச்சினையான்னு கஸ்தூரி கேக்க, தக்காளி நீதான் பிரச்சினையேன்னு சிரிச்சிக்கிட்டாக.அப்புறம் சேரன் கவினைக் கூப்பிட்டுப் பேச, கவின் ரொம்பப் பொறுமையாக் கேட்டுக்கிட்டதும்... எல்லாம் தெரியும்ண்ணா... அவளைக் குழந்தை மாதிரித்தான் பார்க்கிறேன்னு சொன்னதும் எதிர்பாராதது... எங்கே பூகம்பம் வெடிக்குமோன்னு பார்த்தா சேரனின் அணுகுமுறையும் பேச்சும்... ஆஹா இந்த மனுசனுக்குள்ள நிறைய இருக்கு... நாமெல்லாம் இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்... இந்த விஷயம் முள்மீது பட்ட சேலை மாதிரித்தான்... எடுக்கிற விதமாக எடுக்கலைன்னா... கிழிஞ்சிரும்... ஆனாலும் பேசிய விதத்தில் சேரன் மனசுக்குள் உயர்ந்தார்.அடுத்து லாஸ்லியாவிடம் பேசும் போதும் ஒரு அப்பன் என்ற ஸ்தானத்தில் நின்று குரல் உயர்த்திப் பேசவில்லை. ரொம்பப் பொறுமையாய் நிதானமாய் வார்த்தைகளை வெளிப்படுத்தினார். லாஸ்லியா பேசிய விதம் ரொம்ப மெச்சூர்டாய் இருந்தது. சேரன் கவினிடம் சொன்ன விஷயங்களை லாஸ்லியா சேரனிடம் பேசியது அல்டிமேட்... நான் சொன்னது என்னவோ அதை நீ சொல்றேடான்னு சேரன் சொன்னதில் மனசுக்குள் எங்கிட்ட எதுவுமில்லை... உன்னைப் பற்றி அவனிடமும் அவனைப் பற்றி உன்னிடமும் தவறாகப் பேச எதுவுமில்லை என்பதாய்த்தான் இருந்தது. ஒரு தகப்பனாய் தன் பணியைச் சரியாகச் செய்தார்... இப்படிப் பேசும்போது பூகம்பத்துக்கு என்ன வேலை...?பட்ஜெட் டாஸ்க்ல விளையாண்டதை வைத்து யார் இருவர் சிறந்தவர் என்ற கேள்வியை பிக்பாஸ் முன் வைத்த போது எல்லாரும் சாண்டி, லாஸ், சேரன் மூவரின் பேரைச் சொல்ல, வனிதா மட்டும் தன்னை முன்னிறுத்தினார். தானே அந்த டாஸ்க் சிறப்பாக இருக்க ஒரு திருப்புமுனையைக் கொண்டு வந்ததாய் சொன்னார். ஆனால் ஷெரினோ முதலில் லாஸ், சாண்டி சிறந்தவர்கள் என்றார். அதன் பின் ஒட்டுமொத்தமாய் சிறந்தவர் என சேரனைச் சொன்னார்.அப்போது எழுந்த வனிதா சேரன் ஒரு தலைமையாசிரியராய் விளையாடவில்லை. என் விஷயத்தில் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை... அந்தாளுக்கு சப்போர்ட் பண்ணுறீங்கன்னு முழங்க ஆரம்பிக்க, எல்லாரும் சேரனுக்கு ஆதரவாய் நின்றனர். வனிதா விடுவதாய் இல்லை... 'என்னடா இது வாராவாரம் நமக்கு கட்டையைப் போட எவளாச்சும் வந்துடுறாளுங்களே... விடாது கருப்புங்கிற மாதிரி நல்லவன்னு சொல்ல விடமாட்டேங்கிறாங்களே... முகத்துலயே எழுதி ஒட்டியிருக்கு போல இளிச்சவாயன்னு... இடிக்கிறது பூராம் பெருமாள் கோவில் சந்தாவுல இருக்கு...'ன்னு நினைச்சபடி விளக்கம் கொடுத்தார். அப்போது ப்ரிகேஜி புள்ளைங்க ஸ்டிரைக் பண்ணுமா... நீங்க செஞ்சது எப்படிம்மா விளையாட்டை தூக்கி நிறுத்தும்ன்னு கேக்க, ப்ரிகேஜி புள்ளைங்களோட மூளை எப்படின்னு உங்களுக்குத் தெரியலை என்றார். எந்த ஊர்ல ப்ரிகேஜி புள்ளைங்க ஸ்டிரைக் பண்ணியிருக்கு... வனிதா கம்பு சுற்றக் காரணம் தன்னை மோசமாக விளையாண்டதாய்ச் சொல்லி கஸ்தூரியோட ஜெயில்ல போடுவானுங்கங்கிறதுக்காகவே... கஸ்தூரிக்கு நம்மளை கண்டிப்பா உள்ள தள்ளுவானுங்கன்னு தெரிஞ்சி போச்சு... வாயே திறக்கலை... சேரன்தான் என்பதில் எல்லாரும் குறியாக நிற்க, இறுதியில் அவரே வென்றார்.இந்த வாரம் யாரையும் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டான்னு பிக்பாஸ் சொல்லிட்டாரு... அவருக்குத் தெரியும் வனிதாவைச் சொல்லுவானுங்க... என்னடா பிக்பாஸ் ஜெயில்ல போடுறியான்னு தன்னையே அடிக்க வரும்ன்னு... அதான் ஜகா வாங்கிட்டார்.... வனிதாக்கா தப்பிச்சாங்கங்கிறதைவிட பிக்பாஸ் தப்பித்தார். ஷெரின் சேரனைச் சொன்னதில் வனிதாவுக்கு கோபம்... தனிப்பட்ட முறையில் ஷெரின் வனிதாவிடம் மன்னிப்புக் கேட்டார். வனிதா வத்திவச்சிப் பார்த்தார்... ஷெரின் பத்துற ஆளா என்ன... கமலிடம் சொன்னது போல் இந்தக் காதில் வாங்கி அந்தப்பக்கமா ச்சீ வெளிய போன்னு விரட்டிக்கிட்டு இருந்தாங்க.அதன் பின்னர் ஒருவரைப் பற்றி நல்லதே பேசுங்கள் டாஸ்க். நடுவில் உட்கார வைத்து சுற்றி அமர்ந்து நல்லதை மட்டும் சொல்லணும்... கவினைப் பற்றிப் பேசும் போது 'உன்மேல ஒரு கோபமெல்லாம் இல்லை... நீ நல்லவன்தான்... எனக்குன்னு ஒரு கிராப் இருக்கு... அதுல நீ மேலதான் வந்துக்கிட்டு இருக்கேன்'னு காலையில் பேசிய பின்னான எண்ணத்தின் வெளிப்பாடாய் சேரன் சொன்னார். கவினை எனக்குப் பிடிக்கும் இப்ப ரொம்பப் பிடிக்கும்ன்னு லாஸ்லியா காதல் லாவணி பாடினார். இயக்குநராய் யாரிடமும் பழகாதவர் என தர்ஷனும்.... எனக்கு அப்பா இவர் என லாஸ்லியாவும் சேரனைப் பற்றிச் சொன்னார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பற்றி பேசினார்கள்.எப்பவும் கவினும் லாஸ்லியாவும் அமரும் இடத்தில் ஆச்சர்யமாய் தர்ஷனும் லாஸ்லியாவும்... இருவரும் பேசிக் கொண்டிருக்க பாத்ரூம் கிளின் செய்து கொண்டிருந்த சேரன் 'டேய் என்னைய விட்டுப் பேசுறீங்கடா?'ன்னு கத்த, 'பேசுறதே உங்களைப் பற்றித்தான்' என தர்ஷன் சொன்னதும் சேரன் வாய்விட்டுச் சிரித்தார். அவர் உன் மீது அதீத பாசம் வைத்திருக்கிறார்... இந்த வாரம் நான் போனாலும் நீ அவளை மோட்டிவேட் பண்ணனும்டா... இல்லேன்னா அவ 'ஈ...ஈ...'ன்னு இளிச்சிக்கிட்டு விளையாடமாட்டான்னு சொன்னார் என சேரனைப் பற்றி பெருமையாய்ச் சொன்னன் தர்ஷன்.சேரன் கவின் - லாஸ்லியாக்கிட்ட பேசப்போறதா முந்தினநாள் இரவு தர்ஷனிடம் சொல்லும் போது இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை என்றே தோன்றியது. அப்படி அவர் பேசிய போது இருவருமே ஏற்றுக் கொண்டது சிறப்பு. இது சேரனின் பேச்சுக்கு கிடைத்த வெற்றி.பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (25-Aug-19, 5:30 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 29

மேலே