அவள்

கும்பிடப்போன தெய்வம்
குறுக்கே வந்ததுபோல
இத்தனை நாள் கற்பனையில்
உரு கொடுத்து அழகு தேவதையாய்
பூட்டிவைத்த என் காதலி
என் முன்னே தோன்றினாள்
வாயடைத்து போன நான்
' அட்டென்ஷன் ' என்று யாரோ
சொன்னதுபோல் ஓர் ஒலி கேட்டேன்
சிலையாய்ப் போனேனே நான்
என் கற்பனைக்கன்னியை நிஜமாய்
என்முன்னே உயிர் ஓவியமாய்க்
கண்டபோது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Aug-19, 9:13 pm)
Tanglish : aval
பார்வை : 221

மேலே