இலையுதிர்க் காலம் - வழுக்கை மனிதன்

இலையுதிர்க் காலம் முடிவில்
இலையே இல்லா மரக்கிளைகள்
அங்கும் இங்கும் குருத்து இலைகள்
தாங்கிய கிளைகள்
வழுக்கை விழுந்தவன் நினைத்தான்
இலையுதிர்க் காலம் போய் மரத்துக்கு
வசந்தத்தில் இலைகள் எல்லாம்
மீண்டும் முளைக்க , நமக்கேன்
இப்படியோர் விமோசனம் இல்லையே
என்று நினைத்தான் …..
.ஆராய்ச்சிக்குரியதே என்றது மனசு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Aug-19, 9:29 pm)
பார்வை : 229

மேலே