என் அருமை காதலியே

என் அருமை காதலியே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

உன் பைத்தியமே ஆகி போனேன்.
உன் சின்ன கண் அசைவாளே.
பார்க்கும் இடமெல்லாம் உன் பிம்பமே.
கானும் திசையேங்கும் நீயே தெரிகிறாய்.
காதோரம் எப்போதும் உன் பேச்சு.
அதுவே என் நான் சுவாசிக்கும் மூச்சு.

ஏதோ என்னிடம் இருந்து
நீ கொத்தாக எடுத்து விட்டாய்.
மனதை உலுக்கிவிட்டாய்.
இதயத்தில் புது ரத்தம் புகுத்துவிட்டாய்.
காதல் எனும் பிராண வாயு செலுத்திவிட்டாய்.
புத்தம் புது மனிதனாக்கிவிட்டாய்.

கண்களால் கவிதை பேசி
கவர்திழுக்கும் கள்ளியே.
இல்லாத இடை கொண்டு
நடனமென நடக்கும் நாட்டிய பேரொளியே.
உன் வண்ண இதழ்கள்
தேன் சுமந்த ரோஜா.
அதில் தேன் எடுக்க ரீங்காரம் இட்டு
பறந்து வந்து அதில் அமரும் வண்டு நான்.

ஆனந்த மழையில் தோகை விரித்தாடும் சோலை மயிலே
வானத்தில் பல வண்ணமாய் தெரியும் வானவில்லே.
காலையில் ஆத்ம ராகம் பாடும் காண குயிலே.
என்னை அரவனைத்து
தலை கோதி தாலாட்டும்
தென்றல் காற்றே.
காதலன் என்ற புது அவதாரத்தை
எனக்கு அருளிய
என் அருமை காதலியே....

- பாலு.

எழுதியவர் : பாலு (25-Aug-19, 9:44 pm)
சேர்த்தது : balu
Tanglish : en arumai kathaliye
பார்வை : 322

மேலே