அழகியல் அதிகாரம் 3 காதலின் மழைத் தூறல்

விழிச்சார லில்காத லின்மழைத் தூறல்
மொழியி லதுவோமௌ னம் .

மௌனயிதழ் ஓர்பாயும் செந்நதி தீரம்
கரையினில் காதல் அலை .

அலைபோலா டும்விழிகள் துள்ளுவது அங்கே
கயலோஇல் லைகாத லோ ? .

காதல் கவிஞனுக்குக் கற்பனை பெண்களோ
கண்களில் பேசும்உண் மை .

உண்மையில் உள்ளத்தில் வாழ்ந்திடும் காதலோ
பொய்யில் கவிஞன்சொல் லில் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Aug-19, 11:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே