காதலிக்க

மனதில் இதமான அமைதி
தொடரும் மௌனத்திலும்
சலனமில்லாத புன்னகை
நேற்றைய தினம் எதிர்பாராமல்
சந்தித்த பெண்ணின் பார்வை மொழியை
புரிந்து கொள்ள ஏன் தடுமாறினேன்
அவள் தொடர்ந்து பேசியபடியே இருக்க
என்னும் சிந்தனை இம்சித்து
என்னை துரத்த மனம் ஓடுவதுபோல்
பாவனை செய்தபடி
இயங்கிக்கொண்டே இயங்காமல்
வேடிக்கை பார்க்கிறது கண்களின் வழியே
புற உலகத்தை வெறித்தபடி.....

எழுதியவர் : மேகலை (26-Aug-19, 9:51 am)
சேர்த்தது : மேகலை
Tanglish : kaadhalikka
பார்வை : 118

மேலே