இது நியாயம் தானா


அன்பால் இளகினாய்
பண்பாய் பழகினாய்
இனிக்கும் கனியாய்
பனிக்கும் மலராய்
பல்முகம் தந்தாய்
இன்முகம் கொண்டாய்!

தாயாய் சேயாய்
இளைப்பாறும் பாயாய்
நான் ஆவேனென்றாய்
நீயின்றேல் சாவேன்
சருகாகிப் போவேன்
வாழ்வில் இணைவோமா
வாவேன் என்றாய்
இன்று ஏனடி
விட்டு விலகினாய்
இது சரி தானா ?

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (26-Aug-19, 12:00 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 186

மேலே