காதலுக்கு தோல்வி இல்லை

🌹காதலுக்கு தோல்வி இல்லை 💔
- ✒பாலு.

காதலுக்கு தோல்வி இல்லை!
காதலர்க்கு தோல்வி உண்டு!
நல்ல அழகால் காதல் வருவது இல்லை!
நல்ல மனங்களில் காதல் வருவது உண்டு!
காதலில் சாதி இல்லை !
ஆண்சாதி, பெண்சாதி உண்டு!
ஊடல் இல்லா காதல் இல்லை !
பின்பு கூடலில் நிச்சயம் ஆசை முத்தம் உண்டு!
அவன் பக்கத்தில் அவள் இல்லை !
ஆனால் அவன் கனவில் நிச்சயம் அவள் உண்டு!
அவன் ஒன்றும் தமிழ் புலவன் இல்லை!
ஆனால் அவளை பற்றிய அழகிய கவிதை தினம் உண்டு!
அவன் அவள் பொன்னகைக்கு ஆசை படவில்லை !
அவள் புன்னகைக்கு பேராசை பட்டது உண்டு!
எங்கள் காதலில் கெளரவம் பார்தது இல்லை !
கன்னியம் காத்தது உண்டு !
காதலர்கள் எங்களை அந்தஸ்தை
காரணம் காட்டி
பிரித்தது உண்டு!
பெற்றோர்களை எதிர்த்து திருட்டு திருமணம் செய்ய மனமில்லை!
பெரியவர்கள் சம்மதத்துடன் நாங்கள் இனைவோம் என்ற ஆழமான நம்பிக்கை உண்டு !
உடலால் பிரித்துள்ளோம் உண்மை தான்
மனதால் பிரியவேயில்லை!
வானம் அழுதது உண்டு !
பூமி என்றும் அழுதது இல்லை!
காதலர்கள் அழுதது உண்டு!
காதல் அழுதது இல்லை!
💔 - பாலு.

எழுதியவர் : பாலு (26-Aug-19, 12:41 pm)
சேர்த்தது : balu
பார்வை : 179

மேலே