பெண்களை வருணிப்பது பெண்களுக்குப் பிடிக்கும்

அழகைக் கூட்டும், பொன் ஆபரணம், அணிந்த மலருக்கும் வாசம் காட்டும் பூவையின் வருணனை பூமியின் வடிவினை, கண்கள் கருவண்டாய், காண்போரைத் துரத்தும், மேகத்தில் ஒளிந்த தாரகை மல்லியாய் இளிக்க, மோகத்தைத் தரும் மழைச்சாரல் கூந்தலில் சிதற, வரம்பு மீறிய தெங்ககாயாய் விளைந்து, புருவக் கணையால் துளைக்கும் அரும்பு, மாதுளை பார்த்த மனதுமா துளையாய் உடைந்ததேனோ, ஆலிங்கன ராமன் உருவை சீதையே பாராயோ! அம்புலி போன்றவள் அம்பெங்கே விழியிலா, மொழி மாறித் தவித்தேன் விழி மாற்றாயோ! பாதத்துகள்கூட பாதரசமா யென்மேல் பாயுதே! சொல்லவந்த சொற்கள் எலாம்மணத்திலே மறந்ததே! வனமான வாழ்க்கை வளமான உரமாய்வா! மென்வளியாய் என்வழி யெங்கும் சேரவா! நீவைகை அணைக்கட்டா! நான் தேடும் மதுரையோ! பகலில் வரும் நிலாநீ, இரவினில் சுற்றும் சூரியன் நான்! ஊரை வசியம் பண்ணும் ஊர்வசி ஊஞ்சலாக்கினாய் ஏன் என் மனதை ஆடிஆடி களைப்பாக வில்லையா பூங்கொடி...
ச்சீய் என்ற உணர்வுச் சொல்லை கடுமையாய் விதைத்து விட்டு,
மனதுள் மகிழ்வைக் கூட்டும்,
மாயாவி பெற்ற பெண்ணே பாரடி......
−−ப.வீரக்குமார், திருச்சுழி 26-Aug-2019 12:42 pm

எழுதியவர் : ப.வீரக்குமார், திருச்சுழி (26-Aug-19, 12:56 pm)
சேர்த்தது : பவீரக்குமார்
பார்வை : 456

மேலே