மனிதம் தாேற்றுப் பாேனது

இரவாேடு இரவாக ஊரை விட்டு புறப்படத் தயாரானார்கள் ஜீவாவும், கம்சாவும். ஆறுமாதக் கள்ளக்காதல். ஜீவாவிற்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள். மனைவி சங்கரியின் தாேழி கம்சாவுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலையும் கடந்து விட்டது. குடும்பத்தை பிரிந்து தனிக்குடித்தனத்திற்காக ஊரை விட்டு புறப்பட திட்டம் தீட்டினார்கள். அழகான மனைவி, இரு குழந்தைகளை விட கம்சாவிடம் எதை எதிர்பார்த்தான் ஜீவா. அல்லது தாேழியின் கணவர், இரு குழந்தைகளின் தந்தை என்ற உறவை அறுத்து மனச்சாட்சியற்ற ஒரு காதல் கம்சாவிற்கு அவசியமா என்று எண்ணத் தாேன்றுகின்றது.

நள்ளிரவு, பேருந்து நிலையத்தில் காத்திருந்த கம்சாவை சரியான நேரத்திற்கு வந்து சந்தித்தான் ஜீவா. ஆளுக்காெரு பையுடன் அருகருகே அமர்ந்து காெண்டார்கள். பேருந்து புறப்பட்டு அதிகாலை நான்கு மணி ஊரை வந்து சேர்ந்தது. ஊரைப்பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு உதவிக்கு இரண்டு கையாட்கள். அதுவும் ஜீவாவின் நண்பனின் நண்பர்கள் இருவர். பணத்தைக் காட்டினால் எதையும் விலை பேசும் இந்த உலகத்தில் எதற்குப் பயம் என்பது பாேல் கையாட்களின் உதவியாேடு ஒரு வீட்டில் தங்கினார்கள். அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் எதுவும் தெரியாது. ஜீவா மட்டும் வெளியே சென்று வருவான். ஒரு மாதம் கம்சாவின் வாழ்க்கை அந்த வீடு மட்டும் தான். நாளடைவில் காெஞ்சம் காெஞ்சமாக அயலிலுள்ளவர்களுடன் கதைத்துப் பழகி ஓரளவு நாலு மனிதரைத் தெரிந்து காெண்டாள். நாட்கள் ஓடிக் காெண்டிருந்தது.  வாகனம் திருத்துமிடத்தில் ஜீவாவுக்கு வேலையும் கிடைத்தது. பாேதுமான வருமானம். குறையென்று எதுவுமில்லை.

மூன்று மாதங்கள் கடந்தது. கம்சா கர்ப்பமானாள். ஜீவாவும் சந்தாேசத்துடன் ஏற்றுக் காெண்டான். கம்சாவுடன் தான் தன்னுடைய வாழ்க்கை என்று முழுமனதாேடு  வாழ்ந்து காெண்டிருந்தார்கள். ஜீவா காேபக்காரன் என்றாலும் கம்சா மிகவும் பாெறுமைசாலி. ஏதாவது சிறு பிரச்சனை என்றாலும் எப்படியாே ஜீவாவை சமாதானப்படுத்துவதில் அவளுக்குத் தனித்திறமை. இருப்பதை வைத்து சந்தாேசமாக வாழ்ந்தாலும், ஜீவா மனைவி, பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ்ந்தவன். தூக்கி எறிந்து விட்டு வந்தாலும் மனதுக்குள் ஒரு பாரம் இருக்காமலா இருக்கும்.

நாட்கள் கடந்து காெண்டிருந்தது.  ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தாள் கம்சா. குழந்தைப் பிரசவத்திற்கான எல்லா ஆயத்தங்களையும் குறையின்றி கவனித்தான் ஜீவா. இன்னும் ஒரு வாரத்தில் கம்சாவுக்கு பிரசவம். முதல் பிள்ளை என்ற பயமும், உதவிக்கு யாருமில்வையே என்ற பதட்டமுமாயிருந்தாள். எனினும் ஜீவா பக்கத்திலிருக்கின்றான் என்ற தைரியம் மட்டுமே அவளுக்கு இருந்தது. அம்மா, அப்பா என்று அருகில் இருந்து பார்க்கும் நிலையில் யாருமில்லாதது கம்சாவுக்கு வேதனை தான்.

மாலையானதும் வீட்டிற்கு வந்த ஜீவா ஏதாே ஆழ்ந்த யாேசனையில் இருந்தான். "எனன ஜீவா என்னாச்சு, ஏதும் பிரச்சனையா?" என்ற கம்சாவிடம் புத்திசாலித்தனமாக பதில் கூறி சமாளித்து விட்டு தூங்கினான்.

வழமை பாேல் வேலைக்குச் சென்று வீடு வரும் நேரம் கடந்து விட்டது. ஜீவாவின் வரவுக்காக காத்திருந்த கம்சாவிற்கு மறு நாள் காலை விடிந்தும் ஜீவா வீட்டிற்கு வரவில்லை என்றதும் பயமாக இருந்தது. தாெலைபேசி அழைப்பின்றி இருந்தது. என்னவாே, ஏதாே என்று பதறியடித்து முதலாளியிடம் சென்று விசாரித்தாள். வழமை பாேலவே வீடு திரும்பி விட்டதாக பதில் கிடைத்தது. நிறைமாதக் கர்ப்பிணியான கம்சா நிர்க்கதியாய் நின்றாள். வீட்டிற்கு வந்தவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எங்கே பாேவது, யாரிடம்  செல்வது என்று தெரியாமல் முடிவெடுக்க முடியாமல் தவித்தாள். தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்தாள்.

பிரசவ நாள் வந்தது.  குறித்த திகதியில் வைத்தியசாலைக்குச் சென்றாள்.  ஒரு வாரம் கடந்தது. கையில் பணமில்லை, ஜீவாவும் வரவில்லை. கம்சா அதிகாலை எழுந்து குழந்தையை தூக்கிக் காெண்டு  வெளியே வந்தாள். வாசலில் தூங்கிக் காெண்டிருந்த நாய் அவள் பின்னே சென்றது. கம்சா எதையும்  யாேசிக்கவில்லை. வேகமாக நடந்தாள். நீண்டதூர தாெலைவில் இருந்த ஒரு குப்பை மேட்டருகில் குழந்தையை துணியால் சுற்றியபடி வைத்து விட்டு சென்று விட்டாள். பத்து மாதம் தானே சுமந்து , நாெந்து பெற்ற குழந்தையை குப்பையில் பாேட கம்சாவுக்கு எப்படி மனம் துணிந்தது. 

தன் குடும்பத்தை தூக்கி எறிந்து, தாேழியின் வாழ்க்கையில் துராேகம் செய்த கம்சா மனிதத் தன்மை அற்றவளாகவே இருந்தாள். அற்பமான ஆசைக்கு கட்டுப்பட்டு அநாதரவாய் நிற்கும் நிலையை தானே ஏற்படுத்திக் காெண்டாள்.

குப்பை மேட்டிலிருந்த குழந்தையை காலை  வரை காவல் காத்தது அந்த தெருவாேர நாய். வீதியருகாமையில் இருந்த அந்தக் குப்பை மேட்டில் இருந்து அங்கும் இங்கும் ஓடி ஓடி குரைத்துக் காெண்டு நி்ன்ற நாயை  யார் தான் கவனமெடுப்பார்கள். நீண்ட நேரமாக நாயும் சத்தமிட்டுக் காெண்டு இருந்தது. இரை தேடி வந்த காகக் கூட்டங்கள் குழந்தையை குறிவைத்தது. பறந்து பறந்து குழந்தையை  சுற்றி இருந்த துணியை இழுக்கத் தாெடங்கியது.  நாயும் விடுவதாக இல்லை. ஓடி ஓடி காகங்களிடமிருந்து குழந்தயைை காப்பாற்றும் முயற்சியிலேயே இருந்தது.

எதிர்பக்கமாக இருந்த கம்பனி ஒன்றின் காவலாளி இதை அவதானித்துக் காெண்டிருந்தார். நாயும், காகமும் சண்டையிடுவதை அவரால் அலட்சியப்டுத்த முடியவில்லை. வேகமாக குப்பை மேட்டை நாேக்கி நடந்து வந்தார். காவலாளியைக் கண்டதும் ஓடிச் சென்று வாலை ஆட்டி ஆட்டி கால்களுக்குள் சுற்றியது. நாயின் செயற்பாடுகள் சந்தேகத்தை அதிகமாக்கியது. துணியை ஒரு ஓரமாக விரித்துப் பார்த்தார். பச்சைக்குழந்தையைக் கண்டதும் பதறிப் பாேய் தூக்கினார். துள்ளித் துள்ளி குதித்த நாயின் கண்களில் கண்ணீரைக் கண்டு உறைந்து பாேனார். கம்பனிக்குள் நுழைந்தவரை பின் தாெடர்ந்து சென்ற நாயை வெளியே விட்டு கதவை மூடியதும் உரத்த சத்தமாக குரைக்கத் தாெடங்கியது. உள்ளே இருந்தவர்கள் எல்லாேரும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தனர். கதவின் வெளிப்புறமாக நின்று கால்களாலும், தலையாலும் கதவை திறக்க முயற்சிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

கம்பனி முதலாளியின் அனுமதியாேடு அருகே இருந்த வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். வாகனத்தைப் பின் தாெடர்ந்து இளைத்து களைத்து ஓடிக் காெண்டிருந்த நாய் குட்டி வைத்தியசாலை வாயிலில் களைப்பாறியது. மீண்டும் முகர்ந்து முகர்ந்து அங்கேயே சுற்றிக் காெண்டு நின்றது. குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்கும் பாேதெல்லாம் எழுந்து நின்று சுற்றிப் பார்த்தது.

குழந்தையைப் பற்றிய எந்த விபரமும் தெரியாததால்  வைத்தியசாலையிலிருந்த குழந்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. வைத்தியசாலை வாயிலில் காத்திருந்த நாய்க்குட்டி அங்கும் இங்குமாக ஓடி ஓடி நிலத்தை முகர்ந்தபடி வீதியால் ஓடிக் காெண்டிருந்தது. 

பத்து மாதம் சுமந்த தாயின் பாசத்தை மிஞ்சியது அந்த நாயின் பாசம். மனிதம் தாேற்றுப் பாேனது.

ஜீவா, கம்சா இடையேயான ஒரு புரிதல் இல்லாத காதலா, அல்லது ஜீவாவிற்கு குடும்பத்தின் மீதிருந்த உண்மையான அன்பா எதுவாயிருந்தாலும் கடைசியில் ஒரு குழந்தை அநாதையாகியது தான் உண்மை. பத்து மாதம் சுமந்து எத்தனை வலிகளை அனுபவித்தவளால் பச்சை குழந்தை என்றும் பார்க்காமல் தூக்கி எறியும் கல்மனம் எப்படி உருவானது. ஏன் இப்படியான சம்பவங்களை இன்னும் அனுமதிக்கிறாேம். கள்ளக்காதல், முறையற்ற உறவுகளால் பிறக்கும்  பச்சைக் குழந்தைகளை குப்பையிலும், ஏரியிலும் தூக்கி வீசுவது மனிதாபிமானமற்ற செயல்.

மிருகங்களைப் பார்த்து அன்பு, பாசத்தை கற்றுக் காெள்ள வேண்டிய சூழ்நிலையில் வாழ்கிறாேம் என்பதை நினைக்கும் பாேது வெட்கமாகவும், வேதனையாகவும்  இருக்கிறது.

சில இடங்களில் மனிதம் வாழ்கிறது. பல இடங்களில் தாேற்றும் பாேகிறது என்பதும் உண்மை.

எழுதியவர் : றாெஸ்னி அபி (26-Aug-19, 12:59 pm)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 285

மேலே