பழமுதிர்ச் சோலைப் பழம் நீ

பழம்கிடைக்கா மல்சினந்து நீமலையில் நின்றாய்
கிழவேடத் தில்குறத்தி வள்ளியைநீ ஏய்த்தாய்
பழந்தமிழ்ப்பா நின்மணக்கோ லம்போற்ற நிற்கும்
பழமுதிர்ச்சோ லைப்பழம் நீ
-----இன்னிசை
பழம்கிடைக்கா மல்சினந்து நீமலையில் நின்றாய்
கிழவேடத் தில்பெண்ணை ஏய்த்தாய் - அழகுப்
பழந்தமிழ்ப்பா நின்மணக்கோ லம்போற்ற நிற்பாய்
பழமுதிர்ச்சோ லைப்பழமாய் நீ
-----நேரிசை

எழுதியவர் : கவின் சாரலன் (27-Aug-19, 5:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே