நட்பு

நட்புக்கு
முடிவுரை உண்டோ?
நல்ல நட்புக்கு
பிரிவினை உண்டோ?


நட்பு தோள் கொடுக்கும் .
நட்பு மடி கொடுக்கும்.
நட்பு தாய்ப் பாசம் காட்டும்.
நட்பு சேயைப் போல்
நினைத்தணைக்கும்.

பாலிய நட்பு பரம்பரை
வரைக் கிடைக்கும்.
பாடை வரை தொடரும்.
உயர்வான உறவாகச் சிறக்கும்.
உயிரும் கொடுக்கும்.
உண்மை நட்பாக இருப்பின்.
உறங்காமலே நேசம் விழிக்கும்

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (28-Aug-19, 8:05 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : natpu
பார்வை : 221

மேலே