ஆகா ஆகா அருமை அற்புதம்

சுடர்மிகு செஞ்சூரியன்
சுய ஒளியில்லா சந்திரன்
சிவந்த இரும்பு செவ்வாய்
சீராய் சுற்றும் புதன்
விளங்கச் செய்யும் வியாழன்
வெள்ளையாய் தோன்றும் வெள்ளி
சப்தத்தோடு சுற்றும் சனி

ஏழு கோள்களின் தாக்கம்
எப்பொழுதும் எதிர்ப்படும்
எழில் மிகுந்த பூமியில்
இதனை உணர்ந்த யாவரும்
இலகு வழியில் சென்றால்
ஏற்றமிகு வாழ்வினை
எளிதில் கைக்கொள்ளலாம்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொன்றுக்கான ஓரையில்
ஒன்றிணைந்து பயணித்தால்
ஒன்பது கிரகத்தின் நற்பலன் பலவும்
ஒத்துக் கொள்ளும் வகையில்
உன் உடலை நாடி
ஒய்யாரமாய் வந்து அடைவது உறுதி

கிரகங்களில் சூரியன் சனி அங்காரனும்
கிறு கிறுக்க வைக்கும்
ஆற்றல் செறிவு பெற்றதாம்
குரு சுக்கிரன் திங்களும்
கும்பிடுவோருக்கு குதுகலம் தருமாம்
புத்தியால் புதனை புனிதமாக நினைத்தால்
புது புது சிந்தனை மனதில் தோன்றுமாம்

கேது ராகு என்ற அரவ கிரகங்கள்
உண்மைக் கோளாய் இல்லை நம் அண்டத்தில்
கோள பூமியின் வட தென் பகுதி
கொடூரம் நிறைந்து உள்ளதால்
கொடுக்கப்பட்டுள்ளது இக்கோளுக்கு பெயராய்
அண்டங்களை அளந்தோர் அழகாய் கண்டதே
அளப்பரிய கலையான ஜோதிட கலையாம்
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (29-Aug-19, 8:06 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 75

மேலே