வேதியல் மாற்றம் கண்டேன்

தென்றல் வந்துதழுவிடக் கண்டேன்
தேன்மலர்கள் விரிந்திடக் கண்டேன்
மன்றம் வளர்ந்த இசைத்தமிழில்
புன்னகையொன்று பாடிடக் கண்டேன் !

கண்களமுது பொழியக் கண்டேன்
காதல்மொழி அதில்பேசக் கண்டேன்
பெண்ணிலாவைப் பூமியில் கண்டேன்
வேதியல்மாற்றம் என்னில்நிகழக் கண்டேன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Aug-19, 10:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே