அழகு நெருப்பாய்

ஒவ்வொரு நாளும் திகில் சிந்தனை
ஓய்வில்லா வேலையின் ஊடே இறை நினைப்பு
ஒப்புக்கான நினைப்பாய் அவை நேருதோ
ஒன்றும் புரியாமல் ஓட்டமும் நடையுமாய் வாழ்க்கை

சேர்க்கப்படும் செல்வம் எல்லாம் உறுதியின்றி
சேலையால் மூடப்படும் அழகு நெருப்பாய்
சேவைக்கான உழைப்பும் மனதை சிதைப்பதாய்
சேனையின்றி தனியான அரசனாய் மனம்

அரவம் வாயில் அகப்பட்ட இரையாய் நிகழ்வுகள்
அடுத்தவர் தூற்றலில் இருந்து விடுபடவே முயற்சி
ஆண்டுகள் பல ஆனாலும் அன்றாடம் இதுவே
ஆண் என்ற உருவத்திற்காகவே அழுது வழியாமல்

அம்மா அப்பா அக்கா அண்ணன் தம்பி என்றாலும்
அகத்துக்குரியாள் அவளால் ஆன குழந்தையானாலும்
அவளைச்சார்ந்தோர் எனைச்சார்ந்தோர் இம்சைகள்
ஆலையில் அகப்பட்ட கரும்பாய் அணு நொடியும்

இவ்வுலகை ஆக்கிய ஈடு இணையில்லா இறையே
இன்பமாய் இருக்கும் போது இறக்க வரம் தா
இல்லையாயின் இன்பம் அகலா வாழ்க்கையைத் தா
இரண்டும் இல்லாதாயின் எதையும் சாதிக்கும் ஆற்றல் தா.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Aug-19, 10:48 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : alagu neruppaai
பார்வை : 41

மேலே