வான் வெளியில் சிறு துளி

வான் வெளியில் சிறு துளி

வாய் திறந்த
வான் வெளிக்குள்
நான் மட்டும்
சிறு துளியாய்
சுற்றி சுற்றி சுழன்றடிக்க
பற்றி கொள்ள வழி
தேடுகிறேன்

அங்கும் இங்கும்
பறந்த என்னை
மேகத்துக்குள் சொருகி வைத்து
பத்திரமாய் பூமிக்கு
அனுப்பி வைத்து
நீருடன் கலக்க
வைத்தாய்

ஓடி விழும்
தண்ணீரில் இலக்கின்றி
சென்றவனாய் ஆக்ரோஷ
கடலுக்குள் அமைதியாய்
சங்கமிக்க !

சூரியனின் கொடுங்கதிரால்
ஈர்க்கப்பட்ட நீராவிக்குள்
நானும் சிக்கி தவித்து
மறுபடியும் மேலேற

வாய் திறந்த
வான் வெளிக்குள்
நான் மட்டும்
சிறு துளியாய்
சுற்றி சுற்றி சுழன்றடிக்க
பற்றி கொள்ள வழி
தேடுகிறேன்..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (31-Aug-19, 12:56 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 157

மேலே