அவள் ஒரு கேள்விக்குறி - 4

அவள் ஒரு கேள்விக்குறி - 4

கார்த்திக்..அவனது வார்த்தையில்..
பிறந்த முதல் குழந்தை
நல்ல உபசரிப்பு , மூணு வருடத்திற்குப் பிறகு தான்
நல்ல குடும்பம்
ஒரு கூட்டுக குடும்பம்
அப்பா அம்மா சித்தப்பா சித்தி மாமா அத்தை என
கடையில் வேலை செய்யும் ஆட்களும் கூட
பார்த்தால் பணக்கார குடும்பம் தான்
நான் என் ஏழையாக்கப்பட்டேன் எனபது தான் வாழக்கை
யாரை குற்றம் செய்வது
சந்தர்ப்பம்
அதை பயன்படுத்துக் கொள்பவன் புத்திசாலி
விட்டுவிடுபவன் ஏமாளி
திரும்பி அதே வெற்றி கிடைக்க நான்கு வருடம் போராட வேண்டி இருந்தது
போராட்டம் போராட்டம் தான்

நான் பிறந்த குழந்தை , என் மீது எல்லோருக்கும் பாசம் நேசம் தான்
அருகில் இரண்டு வீடும் சொந்தக்காரர்கள் வீடு தான்
அவனுக்கு இரண்டு பெரியம்மாள் அருகிலே
அதில் இரண்டு அக்காக்கள் என் மீது ரொம்ப பாசம்
அவர்கள் வீதியிலே இருந்த காலங்கள் உண்டு
சித்திரமான அக்கா என்றால் என்னக்கு ரொம்ப உயிர் போல
என் அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்
வளர்ந்தேன்
என் சித்தப்புக்கு திருமணமாகி சித்தி வந்தாள்
அரக்க குணம் சில சமயம் என்றாலும் பரவாயில்லை தான்
சித்தப்பா மடியில் அமர்ந்து சாப்பிடட்டும்
கடைப்பிள்ளைகளோடு விளையாடியதும் நல்ல நினைவு
அம்மா மீது கொட்டாங்குச்சி வீசியதும் அதை அவள் திருப்பி வீசியதும் வாழந்த காலம்
எங்கள் வீட்டில் மட்டுமே போன் உண்டு
தொலைகாட்சி உண்டு
எல்லோரும் வருவதுண்டு
அப்பாவுக்கு கூட்டணி பட்டறை தொழில்
சித்தப்பாவுக்கு அப்பாவுக்கும் தனித்தனியே வியாபாரம்
நான் ஒரு கிறிஸ்டின் கான்வென்ட் ஸ்கூலில் படித்தேன்
முதலில் மாமன் விட வேண்டும்
பிறகு கடைப் பையன் விட வேண்டும்
மூன்றாவது படிக்கும் போது ஒரு சின்ன முஸ்லீம் பெண் ரிச்சாவில் வரும்
பென்சில் பாக்ஸில் விளையாடியதை அவள் பாட்டி பார்த்தாள் போல
அடுத்த நாள் சொன்னாl
நீ அவளை குத்தினாய் அல்லவா
அதனால் தான் வேறு ரிச்சாவில் அவளை அனுப்புறேன் என்றாள்
என ஒரு கெட்ட எண்ணம் என நினைத்தேன்
பிறகு ஒரு நாள் அவள் அண்ணன் கமாலுதீனிடம் பள்ளிக்கு லீவு போட்டதால் புக் கேட்க பெல் அடித்தேன்
கண்டுக்கொள்ளவே இல்லை
ஆறு மணிக்கு மேல் எதுவும் தர மாட்டார்களாம் முஸ்லீம் வீட்டில்
ஒரு நாள் அவர் வீட்டில் விசேஷம்
பிரியாணிக்காக வேண்டிய நாட்கள் உண்டு
அப்பொழுதெல்லாம் மூன்று குடும்பமும் சேர்ந்து அந்த பிரியாணி ஆர்டர் செய்து தீபாவளிக்கு வரும்
நன்றாக இருக்கும்
மூன்று வேலையும் சோறு சாப்பிடும் குடும்பம் எங்கள் குடும்பம்
கூட்டு கிடையாது
காலையில் பழையது கூட்டு ஊறுகாய்
மதியம் குழம்பு மட்டும் , இரவு சாப்பாடு
கூட்டிற்கு அப்பளம் மட்டும்
வாரம் ஒரு நாள் இட்லி
ஒரு நாள் முட்டை
ஒரு நாள் ஆட்டுக்கறி உருளைக்கிழங்கோடு
சட்டிலாத சாப்பாடு சாப்பிட்டது என்னமோ ,
பின்வயதில் எல்லோரும் கண்ணாடி
கமாலுதீன் நல்ல படிப்பவன் . நான் சுமார் பாஸ் மார்க்
சின்ன வயதில் எனக்கு அம்மை போட்டது . அப்புறம் பொய் பரீட்சை எழுதி சரியாக எல்லாம் 40 மதிப்பெண் எடுத்தேன்
டீச்சர் சொன்னாl உன்னோட மார்க்க பார்க்க என்ன இருக்கென்று
டியூஷன் டீச்சர் பெயர் ராதா . நியாபகம் இருக்கிறது
நல்ல டியூஷன் சொல்லிக் கொடுப்பாள்
வேறு பையன் வீட்டில் படித்தோம்
தீபாவளிக்கு பட்டாசுகள் ஏராளம்
கடைப்பையனுக்கு என கோணி நெறைய இருக்கும்
மூன்றாவது மாடியில் இருந்து சரம் கட்டி கீழே விட்டோம் நியாபகம் இருக்கிறது
பாதியில் வெயிட் தாங்காமல் அது விழுந்தது
கீழே வைத்து வெடித்தோம்
டபுள் வெடி ,கிருஷ்ணா வெடி என கலக்கும்
ஊசி வெடி ,சர வெடி , நைட்டு வெடிகள் ,ஆட்டோ பாம் , பல உண்டு
வீட்டின் மேலேயும் ஒரு சொந்தக்காரர் தான் , பேச்சு சரியாக இல்லை
பள்ளியிலும் சிறு சிறு சந்தோசங்கள் , சண்டைகள் , அப்படியே வாழக்கை நகர்ந்தது
முதல் எங்கள் பள்ளி தமிழ்ந்தது தியேட்டர் பின்னாடி இருந்தது
பின் மெயின் ஆபீஸ் என கிராஸ் ரோட்டருகில் மாற்றினார்கள்
பின் உள் மாற்றினார்கள்
ஐந்து படிப்பதற்கு மூன்று இடம் மாற்றி விட்டார்கள் ஒரே பள்ளிக்கு
பள்ளியில் ஒரு பெண் மஞ்சள் சாதம் டப்பாவில் வைத்து பிடிக்காமல் சாப்பிடாமல் இருந்தாள்
நான் நமக்கு நன்றாக பிடிக்குமே , அதை என் சாப்பிடாமல் இருக்கிறாள் என நினைத்தேன்
பின்பு எனக்கும் ஒரு தங்கை தம்பிகள் என வாழக்கை ஓடியது
தங்கையும் அதே பள்ளியில் சேர்த்தார்கள்
பின்பு எங்கள் அப்பா வேறு இடத்தில் வீடு கட்டி திருவள்ளூருக்கு மாறினோம்
திருவள்ளூரின் அருகிலேயே ஒரு சிறு பள்ளி உண்டு
ஆனால் ஐந்து வரை மட்டுமே உண்டு . நான் ஆறாம் வகுப்பு படிக்க நேரம் தள்ளிப் போனது
அங்கு ஒரு பேர் போன பள்ளியில் நுழைவுத் தேர்வு எழுதினேன்
அங்கு ஆட்களிடம் சொல்லித்தான் உள்ளே போக முடியுமென கேள்வி
யார் யாரோ போய்ப் பார்த்தோம் , நேரம் கடந்தது
அப்பொழுது ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் நுழைவுத் தேர்வு எழுத என்னை அவசரமாக அப்பாவும் அப்பாவின் நண்பரும் அழைத்துப் போனார்கள்
நான் சும்மா போவது போல் போனேன்
எழுத சொன்னார்கள்
பாஸ் ஆனேன்
ஆறாம் வகுப்பு சேர்ந்தேன்
கடினமான படிப்பு அது
மெட்ரிகுலேஷன் பள்ளி
ஆங்கிலம் தான் பேச வேண்டுமென கடும் கட்டுப்பாடு
சூ அழுக்காய் இருந்தால் துவைக்க வேண்டும்
இலவச பைபிள் கொடுத்தார்கள்
கிழிக்கக்கூடாது என்கிறார்கள்
எட்டாம் வகுப்பு வரை போராட்டம் தான் பாஸ் ஆக. மெதுவாக படிப்பை படித்து முடித்தான்.


நான் பள்ளியில் சுமாராக படிப்பதால் நுழைவுத் தேர்வு எழுதி ஒரு வழியாக தேர்வு ஆகிவிட்டேன் ஒன்பதில் ஒரு சென்ட்ரல் போர்டு பள்ளியில் சேர்ந்து படித்தேன்.
அங்கு நிறைய வித்யாசங்கள் படிப்பில் , விளையாட்டில் , படிக்கும் விதம் எல்லாம் புதிது நன்றாகத்தான் இருந்தது .
நான் காலை செய்த இட்லியை கொண்டுப் போக அவமானமாக நினைதேன் ஆனால் முதல் நாள் மதிய இடைவேளையில் என் மலையாளி நண்பன் இட்லிப் பிரியன் நிறைய இட்லி வாங்கிச் சபித்து என்னக்கு பெருமையாக இருந்தது வகுப்பில் ..
காதல் கிசுகிசுக்கள் ஒருவன் ஒரு மாடர்ன் பெண்ணிடம் பிறந்த நாள் அன்று கிரீடிங் கார்டு கொடுத்தான் உள்ளே ஜிகினா நிறையா இன்னொருவன் ஜிகினாவை நண்பி மேல் முகத்தில் பூசினான் எல்லாம் விளையாட்டு தான் . விபரீதம் அல்ல
ஒரு வகுப்பில் யாரோ விளக்கை உடைத்தார்கள் அந்தப் பையனை யாருக்கும் பிடிக்காத போதிலும் எல்லோரும் சேர்ந்து முட்டிப்போட்ட காலமிது ஒருவன் பான்பராக் போடுவான் இந்திக்காரப்பையன் இப்படி ஒவ்வொருவரும் ஒரு விதம்.
பக்கத்துக்கு கிளாசில் லவ் லெட்டெர் கொடுத்தது ஒரு பெண் ஒருவனை அவன் என் தம்பி போல சொன்னது ஒருத்தி தொடபக்கட்டைக்கு பட்டு துஞ்சம் கேட்குதா எனத் திட்டியது ... எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது பிஞ்சு வாழ்க்கையை எப்படி எல்லாம் இருக்கிறது என்று நினைதேன்
ஆம் இப்படி கலகலப்பாய் போனது எங்கள் ஒன்பதாம் வகுப்பு பள்ளி வாழ்க்கை ஒரு நாள் , இறைவன் வாழ்த்து படிக்கச் எங்கள் கணக்கு வாத்தியார் தமிழ் வழி பாடல் நாம் பாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் அங்கு பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் சமஸ்க்ரிதம் மொழியில் தான் பாடுவார்கள் அன்று தமிழில் பாடினார்கள் சீக்கிரம் முடிந்து விட்டதால் சமஸ்க்ரிதம் பாட்டும் பாடுங்கள் என்று மிஸ் சொல்ல இவருக்கு கோபம் தமிழ் வாத்தியார் திட்டேரென்று பரீட்சை வைத்தார் நாங்கள் ஒன்றும் படிக்கவில்லை அவர் நல்லவர் தான் பெண்களை அடிக்க மாட்டார். திட்டி அனுப்பி விடுவார் ஆனால் ஆண்களை பிரம்பால் அடிப்பார் கணக்கு வாத்தியார் ஒரு நாள் எல்லோரையும் பெஞ்ச் மேல் எழுந்து நிற்கச்சொன்னார் முதல் மதிப்பெண் பெரும் நண்பன் அழுதான் . என்னக்கு இன்றும் நியாபகம் வருகிறது ஒருத்திக்கு பிறந்த நாள் என்று ஆர்ட்டின் கார்டு கொடுத்தான் ஒரு நண்பன் அவள் வேறு பிரிவில் படித்தாள் கடைசி பெஞ்சில் இருக்கும் இரு நண்பர்கள் ஒரு இந்திக்காரன் ஒரு தமிழ் பையன் இந்திக்காரன் தமிழ் பையனுக்கு ஓரளவு படிப்பு சொலிக் கொடுத்து அவனை எப்படியாவது பாஸ் செய்ய வைப்பான். ஏன் என்றால் அவனுக்கு கணக்கு சரியாக வராது ஒரு நாள் இரு வேறு நண்பர்கள் சண்டை போட்டுக் கொண்டதை பிரித்து விடும்போது பிரதவர்களுக்குள் சண்டை இரண்டு வீடு பெற்றோர்களும் வந்து கம்ப்ளைன்ட் செய்தார்கள் ஊட்டி டூர் சென்றோம் என நினைக்கிறேன் அதில் நல்ல விளையாட்டு ஒரு வாத்தியார் டீச்சரை கலைஞ்சரும் அம்மாவும் வைத்து விளையாட்டை விளையாடினோம் நான் சொல்லாமல் லீவு போட்டுவிட்டு ஊருக்கு சென்று விட்டேன் ஜிகினாவையும் பூசிவிட்டான் ஏப்ரல் ஒன்று அன்று காதல் வரவில்லை என்று சிகரட்டே குடித்து புகையால் வாழ்க்கையை ஒரு வாரம் ஓட்டினான் நிறைய கலாட்டா செய்ததால் வாத்தியார்கள் பத்தாம் வகுப்பை அப்படியே எலோரையும் மாற்றிப் போட்டார்கள் நண்பர்கள் பிரிந்து விட்டோம் குழப்பம் தான் அதிகம் ஆனது


ஒரு நாள் மதியப்பொழுதில் அரிதாரம் பூசாத அழகு தேவதை எங்கள் வகுப்புக்கு வரும் வாத்தியார் விடுமுறை என்பதால் வந்தாள் படிக்காத மாணவன் எல்லாம் அவிளிடம் டவுட் கேட்கும் சாக்கில் போய் பேசினான் அதில் அவனுக்கு ஒரு சந்தோசம் போல காலை இடைவெளியில் முட்டையை குபுக் என்று அமுக்கையில் கணக்கு வாத்தியார் கண்டுவிட்டார் என்னப்பா அவ்வுளவு அவசரமா எனக் கேட்டார்? அவருக்கு என்ன தெரியும் மதிய நேரத்திற்குள் முட்டை வடிவம் மட்டும் தான் இருக்கும் என்று ? வகுப்பிலும் சில சேட்டை மாணவன் மாணவிகள் உண்டு செந்தில் ஒரு மாணவியை காதலிக்க ஆரம்பித்தான் .. வெறித்தனமாக .. படிப்பு பாஸ் கூட ஆகா மாட்டான் .. அவனுக்கு நெருங்கிய நண்பன் கமலக்கண்ணன் அவன் உசுபேத்தி விட சினிமாவைப் போல் காம்பஸ் எடுத்து பெண்ணின் பெயரை வரலக்ஷ்மி என்பதை "வரா" என கிழித்துக் கொள்வான் அவள் நல்லாப் படிக்கும் பெண் இவனை ஒரு நாள் திட்டினேன் உன்னால் முதலில் பாஸ் செய்ய முடியுமா என்று .. அவள் சொன்னால் கண்டிப்பாக முதல் ரேங்க் எடுப்பேன் என்றான் அதைப் போல் அடுத்த நாள் செமிஸ்ட்ரீ டெஸ்டில் பாஸ் ஆனான் ஆச்சிரியம் 16 வயதில் மனது எவுளவு விஷமானது பாருங்கள் நான் சொல்வது 1991 - 1993 படித்த கதையை அவன் இப்படியே வாழ்க்கையை சோகமாக ஓட்டினான்.. அவள் வீட்டை தேடுவது ஒரு நல்ல பையன் பொறுக்கி எனப் பெயர் எடுத்தான் தவறான நண்பன் கூட்டணியால்
இப்படி 16 வயதில் பழுத்த பிஞ்சுகள் ஏராளம் டீச்சர் தன் பையை தூக்கி வெளியே போட்டபோது ஏன் என் புத்தகப் பையை தூக்கி வெளியே போடுகிறீர்கள் என்னை வேண்டுமானாலும் அடியுங்கள் என்று ஒருவன் அடிக்க வரும்போது கையை பிடித்த பையன் ஒருவன் கோபப்பட்ட டீச்சர் உடனே முதல்வரிடம் சொல்ல அவர் அவர்களை டிஸ்மிஸ் செய்த கையோடு உங்கள் பெற்றோர்களையும் கூட்டி வா எனக் கூறினார் இப்படி ஒரு புறம் போக பான்பராக் போட்டுத் திரியும் இந்திக்காரப் பையன் ஒருவன் ஒரு பெற்றோர் மீட்டிங் நாடாகும் வேளையில் ஒருநாள் சிகரட்டும் பிடித்தான் பள்ளியில் கழிப்பறையில் அதை ஒரு பெற்றோர் பார்த்து முதல்வரிடம் கம்ப்ளைன்ட் செய்துவிட்டார் அது ஒரு பெரிய பிரச்சனை ஆனது அவனது பெற்றோரை கூப்பிட அவனும் கோபித்துக் கொள்ள அவன் மாத்திரையை சாப்பிட அய்யோக் கடவுளே அவனுக்கு சப்போர்ட் செய்ய வாத்திச்சிகள் சில எதிர்த்த வாதியர்கள் பல ஒரு காணினி இல்லை ஒரு கைபேசி இல்லை ஒரு தொலைபேசி இல்லை அந்தக் காலத்தில் பிள்ளை படும் பாடிப் பாருங்கள் .. இதே இந்தக் காலத்தில் பள்ளியில் மாணவனை தண்டித்தால் பெற்றோர்கள் கொடிப்பிடிக்கிறார்கள் அன்று தண்டிக்கப்பட்ட என் நண்பர்கள் இன்று நல்ல போற்றக் கூடிய நிலைமையில் உள்ளார்கள்

கார்த்திக் ஒரு சராசரி ஆண். யார் வம்புதும்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவன். அவன் பெண்களிடம் பள்ளியில் அதிகம் பேசியதில்லை.அதிகம் பழகியதும் இல்லை. அவன் ஒரு சிறிய எழுத்தாளன், ஒரு கலைஞ்சன்.
தமிழ் மீது அவ்வுளவு பற்று.பள்ளியில் இருந்தே அமைதியானவன். தனக்கு எதிரிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவன் யார் வம்பு தும்புக்கும் போவதில்லை. முக்கியமாக பெண்கள் போக்குக்கே போவதில்லை.அதனால் பெண்கள் மத்தியில் பெரிய மதிப்புண்டு.
ஒரு சராசரி படிப்பாளி.ஒரு சராசரியான சம்பளத்துக்காரன்.

எழுதியவர் : கவிராஜா (2-Sep-19, 4:37 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 183

மேலே