இயற்கை

என் வீட்டு சமையல் அறை ஜன்னலுக்கு பின்னே
தினமும் , காலையில் 'டைகர் பிஸ்கட் ', மதியம்
தயிர் சாதம் என்று இவற்றை சாப்பிட
ஓர் காகம், ஒரு அணில், ஒரு புறா என்ற இவை
வருவது எனக்கே முதலில் ஆச்சரியம் தந்தது
காகம் அணிலை கொன்று உண்பது இயற்கை
காகத்தைக் கண்டால் அணிலுக்கு சிம்ம சொப்பனம்
ஆனால் இங்கு நான் காண்பது …….. அணிலும் காகமும்
பகை மறந்து உறவாடல்…. கலந்து உண்பது !
கூட எப்போதும் வேறு பறவை இனத்தோடு sera
புறா…… மூன்றாவது நபராய் உறவு சேர்த்து
கூடி உணவு பகிர்வது !

இது கண்டு பொறாமையால் வெடிக்கும் பூனை
அணியையும் புறாவையும் துரத்தப் பார்க்க
அண்டவிடாது பூனையைத் தன கூறிய அலகால்
துரத்தியது புறாவைப்போல' காகம் ! ' பூனையே எங்கள் நட்பிற்கு
ஊரு விளைவிக்காதே உன் எல்லைக்குள் இருந்துக்கொள்
அதுவே உனக்கழகு' என்று சொல்வதுபோல் !

மீண்டும் அந்த பூனையை அங்கு நான் காணவே
இல்லை………..

'ஒற்றுமையாய் வாழ விரும்புவோம் காகம்
அணில், புறாவைப்போல '
ஒரு போதும் பூனைப்போல் அல்லாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Sep-19, 1:50 pm)
Tanglish : iyarkai
பார்வை : 279

மேலே