சந்திரனில் பணி தொடர

சந்திரனில் பணி தொடர..!

சந்திரனில் பணி தொடர
வழி செய்யுங்கள் !
இந்த பூமியில்
பச்சை நிறத்தை
ஒழித்து விட்டு

சிமிண்டு நிறத்திலும்
கருமை நிற தாராலும்
பிளாஸ்டிக் பொருளாலும்
அரிதாரம் பூசி
முடித்து விட்டோம்

அதன் மேல் புறத்தில
கரும் புகையால்
வர்ணத்தையும்
பூசி விட்டோம் !

இனி இங்கு வேலையில்லை
சீக்கிரமே சந்திரனில்
எங்கள் பணி தொடர
வழி செய்யுங்கள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Sep-19, 9:54 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 130

மேலே