தத்வம் தத்துவம்

தத்வம் (தத்துவம்).

விநாயக தத்துவ விளக்கம்

வெண்பா

விநாயகன் தத்வம் விநாசமில் லைக்கேள்
விநாயகன் ஆனை முகத்தான் -- கணாபத்
பெருந்தந்தம் ஆணாம் சிறியதுபெண் என்றார்
பிறப்பாண்பெண் ணையேக் குறிக்கும்

வேழமுகம் மானுடமா தாழ்வா ? அற்புதம். (மானுட=மனித)+(மா=மிருகம்)
வேழமுகம் காணும் மனிதவுடல் --- ஏழ்பிறப்பாய்
மாறும் உயிற்பயிர்சீ வன்மிருகம் மாறிமாறும்
மாற்ற மிலாஉல கில்

மாறா உலகில் பிறப்பெனும். 1 தாவரம் 2.மிருகம் 3.நீர் வாழ்வன4. பறப்பன 5.ஊர்வன
6.மனிதர் 7.வான் வாழ் தேவரெல்லாம் குறிப்பிட்ட காலம் வாழ்ந்து ஏழுபிறப்பும் வாழ்ந்து
பின் ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பார். மற்றும் மேலே குறிப்பிட்ட ஏழு பிறப்பும்
அணியும் சட்டையுடை போன்றதாகும். வாழ்ந்து மடிந்துப் பின் பிறக்கும் போது கடவுள்
எந்த உடையை கொடுக்க்கிறானோ அந்த உடையை அணிந்து அதன் பெயரால் ஆனை
என்றோ புழு என்றோ மச்ச மென்றோ புறா வென்றோ பனைத் தென்னை என்றோ
அழைக்கப் படுவார்.



ஆனைக்குப் பானை வயிரெனினும் சைவமே
ஆனைபெரும் சோற்றுக் குவியலை - பானையில்
பொங்கிப் படைத்தளிப்பர் தொங்கும் துதிக்கைநீக்கி
அங்காத்தூட் டக்கவள மாய். (அங்காத்து=வாயைத் திறக்க செய்து)

தொடரும்

எழுதியவர் : பழனிராஜன் (6-Sep-19, 3:40 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 289

மேலே