எல்லாம் நீயே

நீ மாத்திரம்
காத்திரமாய்
என்நெஞ்சில்
வீற்றிருப்பதால்
என்பிலும்
நரம்பிலும் நீதான்
வியாபித்தும்
இருப்பதால்
முகம் கண்டதும்
ஏக்கம் மாறும்
ஆத்திரம் தீரும்
பகரமாய்
அன்பு ஊற்று
அங்கு ஆழமாய்ச்
சுரந்து வழியும்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (7-Sep-19, 11:54 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : ellam neeye
பார்வை : 435

மேலே