இயற்கை

காலம் வசந்தம்
அன்றுதான் பிறந்தது
பூஞ்சோலையில் நான்
இரு வேறு பறவைகளை
பார்த்தேன் …. மகிழ்ந்தேன்
ஒன்று பூஞ்சிட்டு , அழகான
குட்டிக் குருவி அது
அப்பப்பா என்ன ஓட்டம்
அந்த கூட்டிச் சிறகுகளில்
தேன் தரும் பூக்களாய்
தேடி தேடி தேன் உறிஞ்ச
அந்த சிறு வயற்றில்
இத்தனைத் தேனுக்கு இடம் எது..?
என் மனதில் எழுந்த கேள்வி இது ..

மற்றோர் பறவை …..
இதுதான் அந்த 'சாதகப் பறவை'
இது என்ன செய்து கொண்டிருக்கிறது
பாடும் குயிலினம் இது
பாட மறந்ததோ...…
எதையோ தேடி அலைகிறதே
என்ன…. என்ன.. அது
யோசிக்கையிலேயே மேகம் வந்து சூழ
வெள்ளை மேகம் கொணர்ந்தது
வெள்ளை மழைத்துளிகள் ….
என்னை நனைத்த மழைத்துளிகள்
அதோ வாய்த்த திறந்து மூடும்
சாதகப் பறவையின் தாகம் தீர்க்க
அந்த வசந்த கால மழை
அதற்காகவே காத்திருந்த
அப்பறவையின் வேள்வியை முடித்தது
'சாதகப் பறவை ….தாகம் தீர
பாடியது குயில் பாட்டு

தான் தேடியது கிடைக்கும் வரை
காதல் வேள்வி செய்தது
வேள்வி முடிந்த பின்தான்
தாகம் தீர்த்துக்கொண்டது….

நமக்கென்று வாழ்வில் ஒரு
சாதகம் செய்ய வைக்கும்
நோக்கம் வேண்டும்
தளரா முயற்சியும்…...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Sep-19, 9:46 pm)
Tanglish : iyarkai
பார்வை : 243

மேலே