முறைதானோ ===============

முற்றிய விதைநில மெட்டிய வுடனது
முட்டியெ ழுமெழிலு மறிவாயே!
முற்றுகை யிடுமது மொட்டது விரிகிற
மட்டிலு முயலுத லறிவாயோ?
*
வற்றிய பொழுதுக லெட்டிய நிலைவர
விட்டந மதுதவ றறியாதே
வெற்றியை யடைகிற தற்கவை யுறிகிற
வெற்றுநி லமுலையு மறிவாயோ?
*
பட்டினி நிலைவர பற்றிய பிடியறு
பட்டிட மவைசரு கெனவாயே
பட்டென மடிகிற தற்கறு படுகிற
பச்சய மணிகிற மரமாமே.
*
வெட்டிய பொழுதுவ றட்சியு லவிவர
விட்டது தவறென வுணராதே
வெட்டிய மரமது வற்றிய நிலைதர
விட்டது மழுவது முறைதானோ?
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Sep-19, 2:33 am)
பார்வை : 96

மேலே