ரௌத்திரம் பழகு

பெண்ணே
உனை பூ என்பான்
மயங்காதே
முள்ளாக மாறி
உனை காத்துக்கொள்

பெண்ணே உனை
நிலவு என்பான்
உரசி பார்க்க நினைப்பான்
சூரியனாக மாறி
உனை காத்துக்கொள்

பெண்ணே
உனை கங்கை என்பான்
காவிரி என்பான்
உன் அழகில் மூழ்க நினைப்பான்
காட்டாற்று வெள்ளமாக
அவனை நெருங்கவிடாதே

பெண்ணே
உனை ரம்பை
மேனகை ஊர்வசி என்பான்
உன் அழகையும் இளமையையும்
சூறையாட நினைப்பான்
பாம்பாக சீறிப்பாய்ந்து
உனை காத்துக்கொள்...

பெண்ணே
நல்ல தொடல் கெட்ட தொடல்
என கற்காதே
உனை தொட்டாலே
அவன் முகத்தில் உமிழ கற்றுக்கொள்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (8-Sep-19, 6:54 am)
Tanglish : rowthiram pazhaku
பார்வை : 460

மேலே