நீர்ச்சாதி
மழை என்னும்
பரிசுத்தம்
மண்ணை அடைந்தவுடன்
பெற்று விடுகிறது
சாதியினை
பிரசவிப்பதெல்லாம் ஓரிடம்
பிறக்கும் இடம் தரும் சாதிகளாய்
மழலைகளை போல்
தீண்டத்தகாதது என்று
ஒதுக்கும் சாக்கடையாய்
தீண்டி கடவுளின் கருவரைக்குள்
நுழையும் பன்னீராய்