இறுதிக்கட்ட நிலை

படபடக்கும் இமைகள்
துடிதுடிக்கும் இதயம்
நினைவுகளின் அலசல்
நனைந்திடும் விழித்திரை
காணநினைக்கும் முகங்கள்
அறிந்து செய்த தவறுகள்
நிறைவேறா ஆசைகள்
கூறமுடியா எண்ணங்கள்
ஆற்றிட முடியா நெஞ்சம்
பேசிட எத்தனிக்கும் உள்ளம்
முடிவை நினைத்து வருத்தம்
நெருங்கும் கடைசி நொடிகள்
வாழ்ந்தவரை சிறிது மகிழ்ச்சி ,

இவையாவும் தலைப்புகளல்ல
மரணத்தைத் தழுவவுள்ள
மனிதனின் இறுதிக்கட்ட நிலை !

பழனி குமார்
08.09.2019

( வேறு எவரின் படமும் போடுவது தவறு என்பதால்
எனது படத்தையே இணைத்து விட்டேன். )

எழுதியவர் : பழனி குமார் (9-Sep-19, 7:02 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 251

மேலே