அவள் ஒரு கேள்விக்குறி - 3

முடிக்க
ஸ்ருதி யார் ?


அவள் ஒரு கேள்விக்குறி - 3கதை நகர்த்தும் மிகப்பெரிய சாமானியன் கொண்டவர்

அறிவு மூத்த

விடாமுயற்சி கொண்ட

தோல்வியில் இருந்து மீண்டு வரும் சக்தி கொண்ட

எதற்கும் அஞ்சாத

தவறுகளை உடனுக்குடன் தட்டிக் கேட்கும்

தாரகை இந்த ஸ்ருதி.

தனி ஒரு ராஜ்ஜியம் நடத்தி வந்தாள்.

யாரும் தன்னை எதிர்க்க முடியாது. கூட இருப்பவர்களும் ஜால்ரா தட்டி

முன்னுக்கு வர முடியாது.

ஒழுக்கமில்லாமல் யாரும் பள்ளியில் ,முக்கியமாக ஆசிரியர்கள் ஒழுங்காக நடக்க வேண்டும் .

இதுவே இவர்களது கொள்கை குறிக்கோள்

எல்லோரும் தன் மனைவி பிள்ளைகளோடு ஒழுங்காக வாழ வேண்டுமென

மனதார விரும்புபவள் இந்த ஸ்ருதி.

முன்பு பவானி கடும் போட்டியாய் இருந்தாள்.

அவள் ஒரு வழியாக அவளாகவே திருமணம் செய்துக் கொண்டு சென்று விட்டாள்.

அவள் ஒரு நேர்மையான ,விடாமுயற்சி கொண்ட தாரகை.

எதிரிகளை தூக்கி எரிந்து விடும் தைரியமான பெண்ணிவள்.

தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும்.இளம்சிங்க கூட்டம் .ஒரு நல்ல நட்பு வட்டாரத்தில் புடைசூழ தான் ஒரு முடிசூடா ராணியாக வலம் வந்தாள் .

இவளை எப்படி அர்ச்சனா தனது தோழியாக சேர்த்துக் கொண்டாள் என்பதை பார்ப்போம்.

அர்ச்சனா தனது பதவியில் போட்டியில்லாததால் வேகமாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாள்.

கூட இருந்தவனும் இவளுக்கு எல்லா வகையிலும் சொல்லிக் கொடுத்தான்.தனக்கு குழி பறிக்கப்பட்டதை அறியாமல்.

பல ஆசிரியர்கள் விடுமுறை நேரத்தில் அர்ச்சனா ஸ்ருதியின் வெகுமதியை பெற்றுவிட்டாள்.

அவ்வுளவு பெரிய இடத்தில இருப்பவள் இவள் மேல் பரிதாபப்பட்டாள்.பாவம் வயது முப்பதை தொட்டுவிட்டது இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அவளை பற்றி இவளுக்கு கவலை.

ஆனால் இவளுக்கே குழி பறிப்பாள் என கனவிலும் அவள் நினைக்கவில்லை.

இரண்டு வருடமாக நெருங்கிப் பழகியும் பெரிய உண்மையை அவள் மறைத்தே விட்டாளே கள்ளி.

தன் சாம்ராஜ்யத்தில் அவளுக்கு நெருக்கமான இடம் கொடுத்தாள்.அவளும் ஆடாத ஆட்டம் இல்லை.

செய்யாத சேட்டை இல்லை.

முறைத்து பார்பவனை எரித்து விடுவாள். கனிந்து பேசுபவனை ஏறி மிதிப்பாள். அழகும் திமிரும் ஏறிக்கொண்டே போனது.

அர்ச்சனாவும் பவானியும் ..

யாரோ அவளை அறிமுகப் படுத்தினார்கள் ..
ஒரு கூடத்தின் நடுவே ..
அவள் வருவாள் என்று எங்கள் மாணவக்கூட்டமே எதிர்நோக்கி கொண்டு இருக்கிறது ..
மாணவக் கூட்டம் மட்டுமா ?
ஒரு வயதான கருப்பான குண்டுவாத்தி பவுடர் போட்டுக் கொண்டார்
கண்ணாடியில் பார்த்து தலை சீவிக் கொண்டார்..
ஒரு வழுக்குமண்டை வாத்தியார் கொஞ்சம் இருக்கும் முடியையும் தலை வாரிக் கொண்டார் ..
பள்ளியே கலகலப்பாக இருக்கிறது ...
நான்..
நான் மட்டும் என்ன மாணவனா என்ன .. ஒரு இள வயது வாத்தியார்
நாங்கள் எல்லாம் ஒரு தரம் மிக்க .. ஒரு பொருளாதார தரம் மிக்க ஒரு பள்ளி வாத்தியார்கள் ..
எல்லோரும் புதிதாக இணைந்தோம் ..
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி கணினி பிரிவு ..நல்ல சம்பளம் ..
தலைமை ஆசிரியருக்கு முன்பே அறிமுகம் ஆனவள் ..
அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்றார்கள்
அவர் தான் வருகிறாள் ..வருகிறாள்.. என்றார் ..
என் கஷ்டம் எல்லாம் தீர போகிறது என்றார்..
வந்தது எல்லாம் விஷயம் தெரியாத ஆட்கள் என்றார் ..
நான் ரொம்ப எதிர் பார்கவில்லை ... நம்புங்கள் ..
வந்தாள் .. நின்றாள் ..
கூடத்தின் கடைசியில் நின்றால் ..
கதவின் அருகில் ..
கழுத்தை திருப்பி பார்தேன் ...
இடது பக்கமாக ..
ஒரு நவநாகரீக உடையில் தான் வந்தாள் .. லேசான சிரிப்பு ..
பகட்டான பேச்சு ..கரகரத்த குரல் ..
கொஞ்சம் ஆண்மைத்தனம் ..
கொஞ்சம் முப்பதை நெருங்கும் தோற்றம்
உதட்டை பார்த்தால் புகை பிடிப்பாளோ என்று தோன்றியது ..
எனக்கு பத்தோடு ஒன்று பதினொன்று என்று தோன்றியது ..
நாள் ஆனது .. போனது ..
ஒருத்தி தான் இருக்கிறாள் .. கொஞ்சம் சுமாராக என்று எல்லோரும் அவள் பின்னால் ..
அவளும் அதை விரும்பினாள் .. என்றே நினைக்கிறேன் ..
நன்றாக கூட்டத்தினுள் பேசும் திறமை உண்டு
தலைமைப் பொறுப்பு தானாக வந்தது
ஆடினாள் ..ஆடினாள் ..
காலம் போனது .. எல்லாம் நான் தான் என்பாள் ..
எனக்கு ஏதோ பார்க்கும்போது ஒரு வகையான எரிச்சல் தோன்றும்
ஏன் எல்லோரும் இவள் பின்னால் போகிறார்கள் ..
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் ஆடுவதை போல !
அவளை பிடிக்க ஒரு காரணம் என் இடம் இல்லை
இல்லவே இல்லை ..
அடங்கா பிடாரி , எல்லோர் முன்னாலும் கத்துவாள் ..
இவள் எல்லாம் ஒரு பெண்ணா ! என்று கோபப்பட்டவர்கள் அதிகம்..

அடங்காப்பிடாரி
திமிர்பிடித்தவள்
கத்துவாள் .. எதைக் கேட்டாலும்
எல்லாம் தெரியும் என்ற நினைப்பு
லட்சக்கணக்கில் சம்பளம் என்ற திமிர்
கொஞ்சம் அழகு
அதைக் கெடுக்கும் அளவு கேவலமான மாடர்ன் துணிமணி அணிவது
இவள் எல்லாம் ஒரு பெண்ணா!
முப்பது வயது ஆகிவிட்டது
இன்னும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை
ஊர் ஊராய் ஆண் நண்பர்களுடன் சுற்றுகிறாள்
மெலிந்த உருவம்
சற்று முதிர்ச்சியான தோற்றம்
ஆண் குரல் ..
இப்படி எல்லோரும் பயப்படும் அளவுக்கு கோவக்காரி
அவளையும் ஒருவனுக்கு பிடித்து விட்டது
மொழி தீண்டியது
விழி மோதியது
கொடி பறப்பது போல்
படபடக்கும் இமைகள்
சட சட பேச்சு
சிடுமூஞ்சுகாரி
எரிந்து எரிந்து விழுவாள்
கடிந்து பேசுவாள்
அழகியென்பதால் கொஞ்சும் கர்வக்காரி
தனக்கு எல்லாம் தெரியும் என்ற திமிர் பிடித்தவள்
ஒய்யார நடையழகி
கிளிப்பேச்சுக்கு சொந்தக்காரி
ஒரு இளக்காரமான பார்வை
அடங்காத குணம்
அழகான திமிர்
பேச்சுக்கு மயங்காத ஆண்களில்லை
பார்வைகைக்கு விழாத சீமான்களில்லை
திராட்சை கண்ணோடு உரிடிப் பார்த்தால்
மரங்கள் அடுவதையே நிறுத்திவிடும்
வேலையை தப்பாக செய்தாலும் வீம்பாக நடப்பது அவளுக்கு ஒரு கைவந்த கலை
இவளை திட்டாத ஆளில்லை..
வாழ்த்த ஆளும் இல்லை
அவள் நன்றாக பேசும்போது கொஞ்சிப் பேசியவன்
இவளை "தேவதை" என்றான்
இவன் செய்த தவறை அவள் தட்டிக் கேட்கும்போது
சொல்லுவதோ
"அவளும் அவ மூஞ்சியும்"
என்ன உலகமடா இது

கொஞ்சம் சுறுசுறுப்பு ..கொஞ்சம் சிடுமூஞ்சி ..
சற்று வயது குறைந்தவள் ..
திருமணம் ஆகப் போகிறது விரைவில் ..
நாகரிகப் பெண் ..
சாதாரண பொறுப்பில் தான் இருந்தாள் ..
திடீரென்று பவானி ஷிவானிக்கு சரிசமமான பதவிக்கு வந்தாள் ..
அந்த நேரம் பழைய பதவியில் இருந்த பெரியவர் காணாமல் போய் விட்டார்
பவானி மின்னல் வேகத்தில் வளர்ந்தாள் .. பறந்தாள் ..
நண்பர்கள் கூட்டம் அலைமோதியது ..
முக்கியமாக ஆண் நண்பர்கள் கூட்டம் அவளை சுற்றி அலைமோதியது ..
அழகாள் கிறங்கடிகிறாள் என்றாள் ஷிவானி ..
நாளுக்கு நாள் புயலாக சீறினாள் ..
இரண்டு பேர் செய்யும் வேலையை ஒரே ஆளாக பார்க்க வேண்டும் என்று துடித்தாள்
வெறி கொண்டு அலைந்தாள் ..
கூட்டமோ அலை மோதியது இவள் இடத்தில் ..
அவள் கூட மதிய உணவு உண்ண வெளியே செல்ல வேண்டும் என்று பலரும் பின்னால் திரிந்தார்கள் ..
தீட்டி வைத்த விழி ..
அது பேசும் வண்ண மொழி ..
தமிழ் பேச்சு அவள் உயிர் மூச்சி ..
ஆங்கிலத்திலும் விளாசுவாள் ..
எதிர் அணி .(ஷிவானி) அதிர்ந்தாள் .. அலறினாள் .. ஓடி விடுவோமா என்று நினைத்தாள் ..

மழைச் சாரலில் விரிக்கும் குடை போல . விழியை சட்டென திறப்பாள் பவானி ...
அழகாக இருக்கும் .. மின் மினி பூச்சி போல படபடக்கும் ..
விழிக்கு மேல் வண்ண மை தீட்டி இருப்பாள்
அவள் பேசுவதை கேட்டு ரசிக்காத ஆடவரோ பெண்டிரோ .. இல்லை
கிளி பேச்சு ..
சொல் வீச்சு
விழியும் மொழி பேசும்
மழலை பேச்சு ..
தமிழ் அவள் உயிர் மூச்சு
ஆனால் அவள் வைத்தது தான் சட்டம் என்பாள் ..
விழி பார்த்து
இமை கோர்த்து
செவி சாய்த்து
மொழி பேசி
குழல் கோதி
குங்குமம் தீட்டி
மச்ச நாடி
விரல் நடனமாடும்
விந்தையான மங்கை ..
தலைமைக்கு என்ன ஆயிற்றோ ஷிவானி மறுபடியும் மேல் ஏறினாள் ..

பல நண்பர்களோடு சிரிக்க சிரிக்க பேசுகிறாள்
ஆனால் எவரையும் ஒரு கோட்டுக்குள் வைத்து கொள்கிறாள்
இவள் சமைக்க ஆர்வம் இல்லாதவள் ..
பல உணவகங்களில் ருசித்து உண்பாள்..
ஆனாலும் ஒரு கட்டுப்பாடு வைத்து இருக்கிறாள்
மாடர்ன் மிடி போடு சுற்றி சுற்றி வருவாள்
திடீரென்று புடவையில் அழகாக தலை குனிந்து அழகாக ஓவியம் போல் வருவாள்
அவளுடைய மச்சம் அவள் அழகை தூக்கி நிறுத்தும் ..
அவளுக்கு ஊர் வைத்த பேர் திமிர் பிடித்தவள் ..
ஒரு கூட்டமான நண்பர்களுடன் தான் படம் பார்க்க செல்வாள்
ஆனால் வழிபவனை .. காமக் கண்ணோடு பார்கின்றவனை ஒதுக்கி விடுகிறாள்
நான் என்ன நினைகிறேன் என்றால் ..இந்த காலத்து கண்ணகியா
இவள் என்ன மாடர்ன் கண்ணகி பரம்பரையா !
கொடி இடையாள்
அழகுடையாள்
பொடி நடையில்
படபடக்கும் விழி ஓசையில்
அழகாக எல்லோரையும் கவர்ந்தாள் .

படகு போன்ற கார் கொண்டு அவளை தினமும் அள்ளிச் செல்கிறான்
கொல கொளவென சிரிக்கிறாள்
மல மளவென்று பேசுகிறாள்
தலை நிமிர்ந்தே நடக்கும் பழக்கம் கொண்டவள்
திருமணம் ஆனவன் , ஆகாதவன் என எல்லோரும்
இவளைகைக் சூடிக் கொள்ள நினைக்கும் கொள்ளை அழகு
ஒரு ஆர்பாட்டம் இல்லாத அழகு
பொடி நடை
வர்ணம் பூசாத அழகு
திமிராக நடப்பாள்
நீர்ச்சுழல் குடியிருக்கும் கன்னக்குழி ஓர் அழகு
அவளையே கவிதையாக நடந்து வந்தாள்
அவள் ஒரு மாடர்ன் பெண் தான்
ஆனாலும் புடவையில் தலை குனிந்து நடக்கிறாள்
தமிழச்சி அல்லவா !
நீவி எடுத்த கூந்தலும்
தடவி தொடுத்த குங்குமமும்
இமை திறக்காத இதழ்
தரை பார்க்கும் விழியும்
பேசும் வண்ண மொழியும்
சேலை தூக்கிப் பிடிக்கும் அழகும்
வண்ணம் பூசிய இதழும்
சிதறி விடும் மல்லி போல சிரிப்பும்
மின்னும் பட்டுப் புடவையும்
சிதறிய பரந்த குழலும்
ஒரு ஓவியம் போல்
அவன் மனதில் பதியும்
வடக்கு திசையில் வந்தவள் தான் பவானி..
அழகுத் துடிப்பு
அவசரக் கோலம்
அலைபாயும் அழகு
அந்தி மலை பொழியும்
அத்திப்பூ சிரிப்பில்
அகல்விளக்கின் மெல்லிய ஒலி
அகம்பாவம் எட்டிப் பார்க்கும்
அல்லிப் பூவின் கூர்மை
அஞ்சாத நடைக்கு சொந்தக்காரி
அயராது உழைப்பவள்
அள்ளிய கூந்தலை
அள்ளாமல் நீவி எடுத்திருப்பாள்
அத்திப்பூ கமல்ந்திருக்கும்
ஆவாரம் பூ உதிர்ந்திருக்கும்
மிடுக்கான நடை
வேகமான பேச்சு
அடங்காத திமிர்
வேலை தான் உயிர்மூச்சு
ஒரு ஆண்மைத்தனம்
ஆண்களின் உடையை விரும்பி அணிதல்
மாடெர்ன் ஹிடெக் பாவனை
சடார் படார் சொல் வீச்சு
தான் தான் எல்லாம் தெரிந்தவள் என்ற கர்வம்
அழகான உடை உடுத்தினால் அழகான தேவதையாய் இருப்பாள்
சாயம் பூசாத முகம்
யாரும் நடுங்கி விடுவார்கள் இவள் பேசுவதைப் பார்த்து
ஆண் நண்பர்களோடு சகஜமாக பழகுவாள்
வாலாட்டினால்.. வாலை ஓட்ட நறுக்கி விடுவாள் ..

எங்கள் பள்ளி வேறு கிளை ஒன்றை துவக்கினார்கள்
நான் அங்கு மாற்றலாகி விட்டேன்
அவள் வேலையை விட்டு இருப்பாள் என்று நினைத்தேன் ...
அன்று ஒரு நாள் ...
ஒரு மதிய வேளையில் ...
நான் முகம் கழுவிக்கொண்டு தண்ணீர் சொட்ட சொட்ட வெளியே வரும் பொழுது ...
எதிரே வந்தாள் ஒரு தேவதை !
இதுவரை கண்டிராத ஒரு அழகு ..
ஏன் அவள் ஒரு தேவதை தெரியுமா ?
சொட்ட சொட்ட தண்ணீர் கண் இமையை பாதி மறைத்திருந்தது..
ஏதோ தண்ணீரில் மேல் பாசி போல ..
முழுவதுமாக தெரிந்தும் தெரியாமலும் ..
ஒரு இலை மறைவு காயை போல ..
ஒரு வெள்ளை நிற உடையில் வந்தாள் ..மெல்ல தலை நிமிர்ந்தாள்
இரு விழி இமை திறக்கும் கமலம் போல
மௌனமாக பேசினாள் ..
தேனாக இனித்தது ..
அழகாக சிரித்தாள்
மெல்ல நடந்தாள் ..
மயில் இறகு காற்றில் மிதப்பது போல கூந்தல் அசைந்தது..
என் விழிக்கு என்னவோ மொழி பேச தெரியவில்லை
என் மதிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை
குவிழ்ந்த இதழ்
அவிழ்ந்த தமிழ் சொற்கள்
ஒரு புலவன் எழுதிய முதல் கவிதையின்
அழகான எழுத்து பிழைகள் ..
யோசித்தேன் ! யோசித்தேன் !
என்ன நடந்திருக்கும் ..
அங்கே கண்ணாடி கூண்டு கிளி போல கத்தினாள்
இங்கே காண குயிலாய் ..
அழகு மயிலாய்
என்ன மாற்றம் நடந்திருக்கும் !
நட்சதிரம் கொட்டிக்கிடக்கும் குவியல் அவள்
ஒரு ஓவியத் தாரகை
விழி வாசலில் வானில் மேகமாய் கோலம் போடுபவள்
கோதையவள் நிலவுக்கு சொந்தக்காரி
குளிர்ந்து மிலிர்ந்து தலை குனிந்து நடப்பவள்
இடியாய் கோபம் வந்தாலும்
மின்னலாய் தடுப்பாள்
கடலில் எழும் சூரியன் போல் விழி இமைக்கும்
ஒளிரும் புன்னகை
துளிரும் நாணம்
மிளிரும் பொன்னகை
கொண்ட காரிகை
மின்னல் அடித்தது போல் சிரிப்பாள்
விண்மீன் கொட்டியது போல் சிலிர்ப்பாள்
நிலா முகம்
சூரியப் பார்வை
வஞ்சி அவள் ஒரு கோவில் புறா
மெல்லச் சிறகடிக்கும் அழகோ அழகு
ஐயோ அன்றிலிருந்து
உன் சிரிப்பில்
உன் குரலினில்
உன் இமையினில்
உன் விழிதனில்
உன் மொழிதனில்
உன் நடைதனில்
உன் உடைதனில்
உன் நகத்தினில்
உன் விரல்தனில்
உன் பேச்சினில்
மயங்கியவன் தான்
இன்னும் எழும்பவே இல்லை

அழகு உடை உடுத்தி வருவாள்
எந்த உடையும் அவளுக்கு அழகா .. அல்லது இவளால் உடைக்கு அழகா என தெரியவில்லை ?
நீளத்தில் கொள்ளை அழகு
மஞ்சள் அது மஞ்சத்தில் ஆழ்த்திவிடும்
வெள்ளையில் உடையில் தேவதைகள் மண்ணில் இறங்கி வந்தது போல் இருக்கும்
கருப்பு அப்பப்பா... பெண்கள் கருப்பை அழகை தூகிக் காட்டவே அணிகிறார்கள் அல்லவே
சிவப்பில் சிலு சிலுப்பாள்
பச்சையில் மங்களகரமாக இருப்பாள்..
அவளைப் பார்த்ததும்
என் இமை இமைக்கவில்லை
என் விழி நின்றுவிட்டது
அவளை அப்படியே கடித்து தின்ன வேண்டும் போல உள்ளது
கொள்ளை அழகு
நடிகர் பாக்கியராஜ் ஒரு படத்தில்
ஒவ்வொரு நடிகையின் அங்கத்தை எடுத்து
இது போல ஒரு பெண்தான் என்னக்கு வேண்டும் என்பார்
அதை போல் செதுக்கி வைத்த தங்கச்சிலை போல் இருந்தாள்
இருக்கிறாள்
ஒரு கரகரப்பான குரல் தான்
இப்போதைய ஹ்ய்டெக் குரல்
அவள் கொஞ்சம் எழுந்து நடந்தால்
ஆயிரம் கண்கள் அவளை நோக்கும் ..
சில நாள் தான் பார்த்திருப்பேன்
அழகாகப் பேசுவாள்
அழகாக நட்பால்
அழகாக சிரிப்பாள்
அழகான இமைகள்
அழகான உருவம்
உன்னை ஒன்று கேட்கிறேன்
நான் உன்னோடு சினிமா வந்ததில்லை
வெளியில் சாப்பிட வந்ததில்லை
உன்னோடு சேர்ந்து நடந்ததில்லை
பேசும்போதும் பார்க்கும்போதும் உன்முகம் பார்த்துதான் பேசி இருக்கிறேன்
இன்று பிப் 14
உன் வெடித்த உதட்டில்
நான் சாயம் பூசும் நேரம் வந்துவிட்டது
உன் முதிர்ந்த முகத்திற்கு வர்ணனை பூசும் நேரம் வந்துவிட்டது
உன் வெள்ளை முடிக்கு சாயம் பூசும் நேரம் வந்தாச்சு
நீ பேசாமல் அன்றே நான் ஆரம்பத்தில் வெறுத்த களத்தில் நீ சென்று இருக்கலாம்
அன்று ஒன்றும் என்னக்கு தோன்றவில்லை
என்று நீ என் கவிதைகளை பார்த்து பேசாமல் போனாயோ .. வெறுத்து ஒதிக்கிநாயோ
வெட்கம் உன் முகத்தினுள் சூழ்ந்ததோ
நீ ஒரு பெண்ணாகிவிட்டாய்
என் இதயத்தினுள் கலந்துவிட்டாய்
நீங்கா நினைவுகள் என்னைக் கொல்லட்டும்
அவள் மேல் அளவுக்கதிகமாக
பாசம் கொண்டான் பிறகு
நேசம் கொண்டான்
மரியாதையும் கொடுத்தான்
யாரையும் பார்த்து சிரிக்காதவள்
தன்னைப் பார்த்து சிரிக்கிறாள்
வெட்கம் கொள்கிறாள்
நாணத்தால் பூக்கிறாள்
மௌனத்தால் வேர்கிறாள்
பேச்சால் மயக்குகிறாள்
கவிதையில் மயங்குகிறாள்
அழகான அரக்கி
அதட்டுவாள் கூட

கயல்விழி ..
என்று தான் அவளுக்கு பெயர் வைத்து இருக்க வேண்டும் அவளுக்கு
அவள் விழிகளை பார்த்த போது
மலர்விழி
என்றாவது வைத்து இருக்கலாம்
மென்மையான குணத்தைப் பார்த்து
யார் அவளுக்கு பவானி என்று பெயர் வைத்தது
அவள் அய்யனா? அன்னையா?
செயற்கையான வெறுப்பு முகம்
ஊர் அவளை வெறுக்க வேண்டும் என்று
கடுஞ்சொற்களை வீசியே வழக்கம்
அடங்காப்பிடாரி
அவளுக்கென்றே ஒரு கூடம்
சுற்றி வரும் ஆண்கள் கூட்டம்
கூட்டம் நாளுக்கு நாள் அதிகம் தான் .. குறையாது
ஒரு பேயை நேருக்கு நேராக பார்க்கலாம் .. அப்படிப்பட்டவள்
அவள் ஒரு வழியாக வந்தால் மறு வழியாக ஓடி விடுவேன்
அவளைக் கண்டாலே பாவம் .. சதிகாரி
திருமணமானவனும் ஐம்பது வயது கிழவனும் நொடிக்கு நொடி அவளை ரசிக்கும் கூட்டம்
வேலை தெரியாத கிழவன்கள் துரத்தி விடப்பட்டார்கள்
அமைதியானாள் .. அழகானால் ..
பிறகென்ன சினிமா தான்
பேயாக பார்த்த விழிகள் தேவதையாக பார்த்தன !
அவளுக்குள் முதலில் வெட்கம்
பின்னால் கடுங்கோபம்
அவளுக்கே அழகு சேர்க்கும் மச்சத்தை எழுதாமல் விட்டுவிட்டேன் என்ற கோவமா என்ன ?
முதலில் உன்னைப் பார்த்தபோது
கண்கள் உள்ளே போய்
எலும்புகள் தள்ளிக் கொண்டு
அகோராமாய் இருந்தாய்..

உன்னை கண்டு ஓடினேன்
கத்தினாய்
தலைக்கணம் பிடித்தவளாய்
திமிராக பேசினாய் ...

அரை குறை ஆடையில்
கிரந்கடித்தாய்
ஆண்வர்க்கம் வயது பாராமல் உன்னை சுற்றி வந்தது
அதை நீ அழகாக ரசித்தாய் ..

எல்லாம் தெரியும் என்று
தப்பான கோட்டை கெட்டி
நீயே உன் தலையில் மண்ணை அள்ளிக் கொண்டு போட்டாய்
அப்போதே கிளம்பினாய் ..

யார் உன்னைத் தடுத்தது
இரு வேறு பாதையில் சென்று கொண்டிருந்தோம்
திடிரென்று உன் விழியன் மேல் பட்டாய்
ஒரு வெள்ளைப் பட்டாம்பூச்சி என் இமை மேல் சிறகடித்தது
என் வாழ்க்கையே உன் கனவுலகம் சுமக்கட்டும்
நீ தானே என் பொன்வசந்தம்
ஒரு ஓவியம் போல் இருப்பாள்..
கலகலவென பேச்சில்
சிறுவாணி தண்ணீர் போல
சிலு சிலுவென
சிறகடிக்கும் நினைவுகள்
பளபளக்கும்
புண் சிரிப்போடு
கொங்கு தமிழ் பேசும்
இளைய கன்னி
துரு துருவென இருக்கும் சுட்டித்தனம்
மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் பாவை
விழியோடும்
மொழியோடும்
விளையாடும்
பாவை
மனதோடு நீங்காத நினைவோடு உலாவரும் தோழி.

அப்படி நான் செய்திருக்கக்கூடாது தான்
ஏன் அப்படி செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை ..
விழி மூடி யோசித்தாலும் எனக்கு சரியான விடை கிடைக்கவில்லை ..
தவறு என் பக்கம் தான்..
இருக்கட்டும் ..
அன்று அவளைப் பார்த்தபோது ஒரு மௌன விழி தீட்டி மென்மையாக இருந்தாளோ !
கொஞ்சம் பார்த்துக் கொள்வாள்
ரொம்ப பேசிக் கொள்வாள்
மயங்கியது விழியா? மனதா? எது முதலில் ! என்று தெரியவில்லை?
மனது எவ்வுளவு வெறுத்ததோ அந்த அளவுக்கு நேசிக்கிறது
அந்த கள்ள மனது
தரை பார்த்து நடப்பாள் .. விழி உயர்த்துவாள் என்று ,
நான் பார்த்தால் ..
என்னை ஏற்கனவே பார்த்திருப்பாள் ..
பார்க்காதவரே நடப்பது அவளுக்கு கை வந்த கலை
அவள் பேசும் மொழிக்காக ஏங்குவது எத்தனை பேர் ..
அந்த மத்தாப்பு சிரிப்பில் சிதறும் பூக்களை அள்ளத்தான் எத்தனைக் கூடைகள் ..
அதில் நானும் ஒரு கூடை தான் ..
ஏன் என்னை மட்டும் வெறுக்கிறாள் ..
அவளுக்கு நிறைய நண்பர்கள் உண்டு
அந்த கூட்டமே அவளைச் சுற்றித்தான்
ஏன் இவளை விட நிறைய அழகிய பெண்கள் இருந்தும்
இந்த விழிமகளை சுற்றித்திரிகிறார்கள்
இவள் யார் மனதையும் புண்படாமல் பேசுவதாளா?
இல்லை எல்லோரிடமும் சமமாக பேசுவதாளா?
ஒரு ஆண் போல் எதற்கும் அஞ்சாமல் நடப்பதாளா?
ஆனாலும் மயங்கி விட்டது ஏனோ ..
அவள் புரிந்து கொண்டாள் ..
மற்றவர்களும் இவனும் வேறு என்று
ஆனால் எனக்கு அவள் "ஒரு வண்ணமொழி தீட்டும் அழகியாகவே தென்பட்டாள்"
அவள் சுத்தமாக ஒதுக்கி வைத்தாள் என்னை ..
முதலில் புரியவில்லை ..
படிப்படியாக கொஞ்சம் புரிந்தது ..
எரிச்சலாக கத்துகிறாள்..
விரைவாக சென்று விடுகிறாள் பார்பதற்கு முன்
வரி கோர்த்து
விழி பார்த்து
பார்த்து பார்த்து
அழகாக எழுதிய விதை... விதை படிப்படியாக வளர்ந்து
கண்ணு க்கு ஒரு வரி
இமைக்கு ஒரு வரி
மேனிக்கு ஒரு வரி
கூந்தலுக்கு ஒரு வரி
பேச்சுக்கு ஒரு வரி
என நீண்டு கொண்டே போனதால் அவளுக்கு என்னமோ கோபம்..!
ஏன் வரிகள் போதவில்லையோ !!
ஏன் என்றால் ...
அவளது மழலை பேச்சு
அவளின் சிரிப்பு தேன் தேன் தேன்
அந்த பாவையின் வெட்கம்
அவளது மை தீட்டிய விழிகள்
நான்கு திசைகளில் நான்கு தேவதைகளாய் தருவாள்
பிரம்மன் எழுதிய கவிதைத்தாளின் முதல் பக்கம் கடலில் வீழ்ந்தது.. நீங்கள் கண்டீர்களா
வெள்ளி பூத்த திருநீரை நெற்றியில் கலந்தவள்
இளமாஞ்சிவப்பு குங்குமத்தை இட்டவள்
செங்கதிரோன் நிறங்கொண்ட நெற்றியுடையாள்
அவள் ஒரு கோவை தந்த பாவை
நியூயார்க் அழகிய அமெரிக்காவின் உயரமான எண்ணம் கொண்டவள்
மேற்கு இந்திய தீவுகள் போன்று பல பாவனையைக் கொண்டவள்
பொன் அது குறைந்தாலும்
அவள் ஒருஅழகான ஓவியம்
ஒற்றை ரோசா
கன்னியின் கன்னக்குழி
கண்சிமிட்டும் விண்மீன்கள்
வெனிசுலாவின் நீலப் பறவை
பூமித்தாய் பெற்ற பவானியும் ஷிவானியும்
நிலவுக்கு காதல்..
இருந்தாலும் அவளை நிலவால் மறக்க முடியவில்லை
அவளுக்குள் எத்தனை பருவங்கள்
அவள் ஒரு தேவதை
அவள் குழலா நிழலா
அவள் விழிக்குள் நான்
இன்ப தூறல்
வண்ண வண்ணமாய்.. அது என்ன நிலவு சிவப்பாய் காட்சி அளிக்கிறது
சிவந்த நாரை , காதல் குயில்கள்
பூக்கோலம் போடுகின்றன
இயற்கை உலா பாவைக்கு தூது
சொல்
அன்ன நடை
கேரளத்து அழகு பெண்கள் இவளைக் கண்டு அவள் ஏன் பிறந்தாள் என்று கர்வம் கொள்கிறார்கள்
காலை பொழுதில்
கிழிசல்
புன் சிரிப்பு
மாலைப் பொழுதில்
நல்ல ரசனை
அழகு பாவை பற்றிய கற்பனை
அழகாக சிரிக்கும் பூவை
கோடை மழை
மலர் விழி
மழலை பேச்சு
அழகிய பேதை
நவநாகரீக மோகினி
நகரத்து மங்கை
குற்றாலத்தின் பஞ்சவர்ணக்கிளி
குமரியின் கற்பனை கடல்
தங்க மகளின் மாம்பூவின் நீந்தல்
இவளுக்கு தென்றல் பூங்காற்று இயற்கை உயிர் எழுத்து பூ மாலையாய்
ஆதலால் இந்த கவிதையை தொடுத்தேன் !
இந்த அழகான தேவதைக்காக
ஏன் என்றால்
"அவளுக்கு நிகர் அவள் தான்"

அவள் ஏன் பிறந்தாள் !
நான் என் பிறந்தேன் ! அவளை ரசிக்கத்தான் ...
பட படவென விழி படபடக்கும் .. அன்னத்தின் சிறகுகள் போல
அந்த விழியைப் பார்க்க ஆயிரம் கண்கள் கூடி விடுகின்றன
சட சடவென பேச்சு .. சடாரென ஓடும் சாரைப் பாம்பைப் போல
அந்தப் பேச்சைக் கேட்க ஆண் நெஞ்சு தவம் கிடக்கிறது
கொல்லென சிரிப்பு மத்தாப்பு சிதறுவதைப்போல போல
மற்ற பெண்களுக்கெல்லாம் கன்னத்தில் மச்சம் கொடுத்து அழகு சேர்க்கும் கடவுள்
இவளுக்கு கண்ணுக்கு கீழ் கருவளையத்தையும் சேத்து அழகை கூட்டி இருக்கிறான்
எந்த ஆண் மகனாவது இவளை பார்க்காமல் போனால் அவன் கண்களில் ஏதோ கோளாறு
சிரிப்பை கேது மகிழா விட்டால் அவள் காதில் ஏதோ கோளாறு
கன்னக் குழியை பார்த்து ரசிக்கா விட்டால்.. அவன் பிறப்பே ஒரு கோளாறு தான்
கொடி இடை
பொடி நடை
மின்னல் பார்வை
முகில் சிரிப்பு
வானக் குழல்
சிவந்த தேகம்
மலர்ந்த முகம்
மொத்ததில் அவள் ஒரு
பிரம்மன் வரையாத ஓவியம் !
குவிழ்ந்த இதழ்
குளுமையான பேச்சு
குழுங்கி குழுங்கி சிரிப்பாள்
குபேர வருமானம்
குறுக்கு சிறுத்தவள்
குட்டையான உருவம்
குட்டை பாவாடை உடுத்தி
குண்டு கண்களாள் உருட்டுவாள்
குழிப்பணியாரம் போன்ற கன்னக்குழி
குனிந்த தலை .. சில சமயம் அழகாக நடப்பாள்
குறில் நெடில் பிரித்து அழகாக பேசுவாள்
குவலயம் சுற்றி பரப்பாள்
குட்டி பிள்ளை போல் கிளி போல் கீச்சுவாள்
குறு குறு பார்வைக்கு சொந்தகாரி
குயில் போல் பாடவும் செய்வாளோ !
அவள் ஒரு அழகிய தமிழ் மகள்
அலைபாயும் கடலும் அலை அடிக்க மறந்துவிடும் இவள் அழகில்
அவள் ஒரு கடலோரக் கவிதை
அவள் ஒரு பிரம்மன் வரைந்த ஓவியம்
அவளை மேனகை ரம்பை ஊர்வசி விட அழகானவள்
அந்த குவிழ்ந்த இதழ்
அவள் ஒரு மாடர்ன் கண்ணகி
அவள் ஒரு அழகிய கள்ளி
அவள் ஒரு முகில்
அவள் ஒரு நிலவு
அவள் தேனூறும் சொற்களை பேசியதால் உதிரிபூ
அவள் ஒரு செங்கதிர்
அவளது நடைபாவனை சிந்திக்க வைக்கும்
அவள் மொழி பேசினால் நாணமா
அவள் ஒரு வெண்பாதம் கொண்ட பேரழகி
அவள் அழகிற்கு இந்த வரிகள் போதவில்லை
கண்சிமிட்டும் சந்திரனே அவள் அழகிற்கு தலை குனியும்
அவளது சிந்தனையால் மதியில் பிறந்து விட்ட கவிதை
ஒரு கலகலப்பான சிரிப்பில் திசை மாறா பறவை
இவளுடன் நட்பு கொள்ள வான் நீலத்துக்கும் கடல் வெண்மை நிறத்துக்கும் போட்டி

இப்பொழுது நான் அவளை கேட்கிறேன்
ஏன் என்னை எழுத வைத்தாய்?
நான் உன்னைத் தான் கேட்கிறேன் ...
கர்வம் கொண்ட அழகியே
அழகு மோகினியே
உன் கண்களுக்கும் நாணம் வந்துவிட்டது
உன் விரல்களும் என்னைப் பார்த்தாள் நடுங்குகிறது
கால்கள் கோலமிடுகிறது
நீ முழுப் பௌர்ணமி போல் பெண்ணாகிவிட்டாய்
நாணம்
வெட்கம்
மௌனம்
மெல்ல இமைக்கும் இரு விழிகள்
அங்குமிங்கும் அலையும் ராத்ச்சசியே..
உன் திமிர் எங்கே போனது இப்போது
ஐயோ இத்தனை வருடம் கழித்து தான் வர வேண்டுமா
மறுபடியும் ஈர்ப்பு

என் வரிகளுக்கு உயிர் கொடுத்தவள்
என் விழிகளுக்கு இமைக்காமல் இருக்க கற்றுக்கொடுத்தவள்
என் சுவாசத்திற்கு மூச்சு விடாமல் இருக்க கற்றுக்கொடுத்தவள்
என் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தவள்
என் பேனாவிற்கு மை ஆனாள்
என் கடிகாரத்திற்கு முள்ளாக ஆனாள்
என் அம்பிற்கு வில்லாக இருந்தாள்
என் செடிக்கு வேறாக இருந்தாள்
என் வார்த்தைக்கு பொருள் கொடுத்தாள்
என் பார்வைக்கு தேவதையாக காட்சி தந்தாள்
என் நடைக்கு வழி வகுத்தாள்
என் வானின் முகில் அவள்
என் பூமிக்கு மழையாக வந்தாள்
என் தோல்விக்கு ஊக்கம் அவள்
என் வெற்றிக்கு வித்திட்டவள்
என் புகழுக்கு ஒரு ஏணிப்படி அவள்
என் உழைப்பை எனக்கு புரிய வைத்தவள் அவள்
என் வெற்றிக்கு வழி வகுத்தவள்.. மொத்தத்தில்
என் கவிதைக்கு இன்றும் என்றும் உயிர் கொடுத்தவள்.. கொடுப்பவள்
அவள் கோபப்படும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் !
உனக்கு வயதாகிறது என்று சுட்டி காட்டவில்லை. ஆனால் ஊர் சொனது
நீ ஆண் நண்பர்களோடு சுற்றுகிறாய் என்று நான் தப்பாய் சொன்னது இல்லை .
உன் நண்பர்கள் தான் நா கூசாமல் சொனார்கள்
நீ திமிர் பிடித்தவள் என்றார்கள்
பத்ரகாளி என்றார்கள்
அடங்கா பிடரி .. திருமணம் ஆனாலும் வாழ மாட்டாள் என்றார்கள்
வயது குறைந்தவன் உன்னை காமப் பார்வையோடு பார்த்தான்
வயது ஆனவன் அதை கண்டு சிரித்தான் .. அவனும் இவள் ஒழுங்கானவள் இல்லை என்றான்
போகப் போக உனக்கு வயது ஏற ஏற திருமண ஆசை ஏனோ குறைந்து விட்டது
உன்னை பார்த்து இவளுக்கு எத்தனை பிள்ளைகள் என்று ஏலகரமாய் கேட்டான் ஒருவன் ..
இவளுக்கு திருமணம் ஆகி விட்டதா? இல்லை விவாகரத்து ஆனவளா? என்றும் கேட்டார்கள்
யாருமே இவளை குடும்ப பெண்ணாக பார்கவில்லை
ஏன் இவள் வேளைக்கு செல்வதாளா ? பெரிய பதவியில் இருப்பதாளா?
நான் என்ன சொல்லி விட்டேன்! இவள் அழகா இருக்கிறாய் என்றா?
இல்லை நீ அலங்காரம் செய்யாமலே நீ அழகா இருக்கிறாய் என்று சொன்னதாலா?
இவள் சமூகத்தை நினைத்து கோபப்பட வேண்டுமா? இல்லை என்னிடமா?
அவர்கள் இவளை கண் முன்னே வழிந்தார்கள்..
பேசவில்லை என்றால்.. எவன் கூடவும் பல் கட்டுவாள் என்றார்கள்
நான் நீ அழகாய் இருக்கிறாய் என்று ஏன் சொன்னேன் தெரியுமா
நீ இன்னும் அழகாய் இருக்கிறாய், அழகாய் திருமணம் செய்து கொண்டு வாழத்தானே தவிர நன் அவன் இல்லை..
புரிந்து கொள் கன்னியே
ஒன்று கூட இருக்கலாம்
எல்லோரும் இவள் அழகை ரசிக்கவும் ஆடையை கிண்டல் செய்வவும் செய்தார்கள் ..
நான் இவள் மனதில் இடம் பிடித்து விடுவேன் என்று பயமா
பயம் யாருக்கு... அவர்களுக்கா? இவளுக்கா ?
ஒரு நண்பன் உரைத்தான்.. நீ அவளை பார்க்காதே என்று ..
என் நிலைமையை எடுத்து சொன்னான்..
இதை இப்படியே விடுமாறு சொன்னவுடன் தான் என் உள் மனதுக்குள் உறைத்தது
நான் என்ன நினைக்கின்றேனோ
அதையே அவளும் கூட நினைக்கலாம் என்று
என்ன தான் திமிராய் நடந்தாலும் பெண் மனதிலும் ஆசை இருக்கும் அல்லவே .
புன்னகை புரிந்தவள்
மின்னலாய் சீறுகிறாள்
என் பேரைக் கேட்டாலே எரிந்து விழுகிறாள்
ஆனால் அவள் மனதிற்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை
பெண்ணின் மனதை தொட யாருக்கு தான் உரிமை உள்ளது
ஒவ்வொரு வார்த்தையாக யோசித்தே பதில் அளிக்கிறாள்
அதுவும் சரி தான்
நன்கு பழகியவள்
எல்லாம் புரிந்தவள்
முதிர்ச்சி பெற்றவலுக்கே அன்பை சொல்ல முடியுமா ?
முடிவு
நான் தெறித்து ஓடிய காலம் பொய்
அவள் தெறித்து ஓடி விட்டாள்
தெரி தெரி தெரி
வாழ்க்கையை தேடிக் கொண்டாள்..

புன்னகை புரிந்தவள்
மின்னலாய் சீறுகிறாள்
என் பேரைக் கேட்டாலே எரிந்து விழுகிறாள்
ஆனால் அவள் மனதிற்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை
பெண்ணின் மனதை தொட யாருக்கு தான் உரிமை உள்ளது
ஒவ்வொரு வார்த்தையாக யோசித்தே பதில் அளிக்கிறாள்
அதுவும் சரி தான்
நன்கு பழகியவள்
எல்லாம் புரிந்தவள்
முதிர்ச்சி பெற்றவலுக்கே நட்பை சொல்ல முடியுமா ?
சொல்லாமல் சென்று விட்டாள்
ஏன் !
என்ன கெடுதல் செய்தேன் அவளுக்கு ..
வேண்டுமென்றே கேள்வி கேட்டாலும்
வான் கொட்டும் மழை போல பட படவென கொட்டி தீர்ப்பாள்
கோவம் அதிகம் வந்துவிட்டது போலும் ..
கலையான முகம்
கலகலப்பான சிரிப்பு
கயல்விழியாள்
கர்வம் அழகிலா .. கொண்ட பொறுப்பிலா
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொண்டவள்
கடல்தாண்டி நான் சென்றவுடன்
கடிகாரம் வேகமாக சுற்றி விட்டது போலும்
காலம் நொடிப்பொழுதில் ஓடி விட்டது
கடுகளவும் யார் தப்பாக பேசினாலும் துணிவாக தட்டிக்கேட்பாள்
அறுபது நாட்கள் குலுங்க குலுங்க சிரித்து பேசியவள்
அறுபது நொடி கூட பேச மறுக்கும் காரணம் என்னவோ ?
தெரியவில்லை
நான் என்ன தவறு செய்து விட்டேன் ..
உன் விழி பேசியதை தான் நான் மொழியாக எழுதினேன்
காலம் தான் இந்த கன்னிக்கு புரிய வைக்க வேண்டும்
இல்லை
கடவுள் இன்னொரு சந்தர்ப்பம் சந்திக்க எழுதி வைத்து இருந்தால் ..
அப்படி நடந்தால்
எதனால் கோபம் என்று மட்டுமாவது தெரியபடுத்து தோழியே ...
மதியாதார் தலைவாசல் மிடியாதே என்று ஔவை சொன்னது நியாபகம் இருக்கிறது தான்
அவள் என்னை மதிக்கவில்லை
முகம் கொடுத்து பேசவே இல்லை
கண்டால் எரிந்து விழுகிறாள்

மாலையும் தோரணமும்
காலையும் மங்கள வாத்தியமும்
மெல்லிய சிரிப்போடு
குனிந்த தலையோடு
கொஞ்சம் வெட்கம்
சற்று ஞானம்
அழகிய மணப்பெண்
புது வாழ்க்கையை துவங்கப் போகிறேன் ..
என்னவன் கை நெறைய சம்பாதிக்கிறான்..
படகு போன்ற கார் , வங்கிப் பணம் .. பல உண்டு
இவனைக் கைப் பிடிக்க காரணம் பல நண்பர்கள் உண்டு
தனிப்பட்ட பெண்ணான என்னை கூண்டுக்கிளி போல பார்த்தான் என் திருமணமான ஆண் நண்பன்
ஊர் என்ன பேசினால் என்ன
எனக்கென்று நான் வாழ்க்கையை வகுத்துக் கொண்டேன்
எனக்கென்று ஒரு குறிப்பிட்ட நண்பர் பட்டாளம் உண்டு
என் அழகிற்காக என்னை தேடி வந்த கூட்டம் என்ற கர்வம் எனக்குண்டு
நான் ஒன்றும் அவ்வுளவு அழகில்லை .. ஒரு சிநேகாவிற்கும் ஆனந்திக்கும் நடுவே
என் மாடர்ன் உடைதனில் .. சிரிப்பில் .. உதவுவதினால் .. நல்ல பெயரும் உண்டு
என்னையும் வேறு மாதிரி பார்த்த இரு விழிகள் ..
நான் இமைப்பதையும் , விழிப்பதையும் கூட விட்டு வைக்கவில்லை
நாணத்தால் நானும் ஒரு முடிவு எடுத்திட வேண்டும் ..
எடுத்தேன் திருமணத்தை விரைவில் முடிப்போமென்று ..
இது தானே என் வாழ்க்கை
எவ்வுளவு நாள் தான் நான் இந்த ஆண் கூட்டத்தில் இருந்து என்னை தன்னந்தனியாக தர்காத்துக் கொள்வது
இதோ எனது திருமணம் ..
என்ன ஒரு இரண்டு வருடம் கழித்து ஒரு நாற்பது நெருங்கும் போது செய்து இருப்பேன் அவன் குறுக்கில் வரவில்லை என்றால் ..
கடவுளுக்கு மொத்ததில் நன்றி.. என்றால் அவள்
மேகத்துக்கும் மின்னலுக்கும் திருமணம் இன்று ..
அழகு நயன்தாராவிற்கு பிறந்தநாள் இன்று..
சில்லென பெய்யும் மழையில் விரிக்கும் குடைப்போல இமை
தாமரை இலையின் மேல் நீரைப் போல கை நகத்தின் மீது நகபாலிஷ்
கொடி இடையாள் ..
தமிழ் மொழி கொண்டு ..
இரு விழி கண்டு
கை மேல் உயர்த்தி படபடவென பேசுவாள்
தப்பு செய்தால் கடவுளே என்றாலும் தட்டிக் கேட்பாள்
நட்புக்கு மதிப்பு கொடுப்பாள்
முல்லைக் கொடிப்போல் ஒய்யாரமாய் நடப்பாள்
அந்தக் கமலத்தின் இரு விழி கொண்டவளுக்கு இன்று மணக்கோலம்
திருமணக்கோலம்..
மேகங்கள் ஊர்வலமாய் மழையாய் வாழ்த்து சொல்கின்றன..
வாழ்த்தட்டும் பல்லாண்டு வாழ்க என..
அழகாகப் பேசியவள்
மிடுக்காக நடந்தவள்
எப்படி இருக்கிறாளோ
நெருங்கிய சொந்தம் போல் பழகினாள்
விலகியவுடன்
புது நகரத்தில் நுழைந்தவுடன்
வேகமானவள் விவேகமானாளோ
ஒரு நொடிகூட நினைக்க மாட்டாளா
அவ்வளவு கல்நெஞ்சக்காரியா அவள்
இல்லை
இருக்காது
நன்றாக இருக்கட்டும்.. மகிழ்ச்சியாக வாழட்டும்
மனமார வாழ்த்துகிறேன்.
ஒருவழியாக பவானி சென்றுவிட்டாள் . இன்னும் தொடரும் அதிகாரம்

எழுதியவர் : கவிராஜா (9-Sep-19, 7:21 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 69

மேலே