காற்றோடு பிறந்து வளர்ந்து இறுதியாய்

காற்றோடு பிறந்து வளர்ந்து இறுதியாய்..!
காற்றுக்கு பயந்து
பற்றி படர இழை
நூலை முன் வளர்த்து
அருகில் உள்ள
செடி மரங்களை
இறுக்கி பிணைத்து
வள்ரும் கொடிகள்

குட்டி செடியாய்
வளரும் பருவம்
அடிக்கும் காற்றுக்கு
இசைவாய் நடனமாடி

இளமை வளர தண்டு
நின்று காற்று அடித்தால்
தலையை ஆட்டும்

காய்த்து தொங்கும்
காய்கள் இருந்தால்
அடிமரமும் தலையும்
மெல்லிய சலனம் காட்டும்

பெற்ற குழந்தையாய்
காய்த்த காய்கள்
சிந்தி விடும்
என்ற பயமோ?

வயதின் தளர்ச்சி
காற்றுக்கு காத்திருந்து
காலத்தை முடித்து
கொள்ள கரையான்
அரித்து விட்ட
மரங்கள் !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Sep-19, 10:16 am)
பார்வை : 82

மேலே