மழை மேகம்

மழை மேகம்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

எங்கள் கண்களில் தெரியும்
விண்ணில் ஓடும் மேகங்களே
மண்ணில் வந்து விளையாடு
மழைநீர் துளிகளாக உறவாடு!

ஓடி விளையாடும் மழை மேகமே
ஆடி பாடி மண்ணில் வந்து
குழந்தையுடன் கொஞ்சி விளையாடு
குளுமை மணம் எங்கும் தந்துவிடு!

மழை மேகங்கள் ஓடுவதைக் கண்டு
மகிழ்வர் காதலர்கள் புன்னகையோடு
மண்ணில் மழைநீர் மலரும்போது
மஞ்சத்தில் கொஞ்சி மகிழ்வர்!

கருமேகம் கண்ட மயில்கள்
விரிக்கும் அதன் தோகையை
பார்க்க வருவாய் அதன் அழகை
கலக்கும் உன் மழை உறவை
அழைப்பாய் மழைத் துளிகளோடு!

வாடிய பயிரைக் கண்டு
வாடிய வள்ளல்பெருமான்
ஓடும் உன் மழைநீர் கண்டு
மகிழ்வார் மழை மேகத்தோடு!

கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்,
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (9-Sep-19, 3:09 pm)
Tanglish : mazhai megam
பார்வை : 77

மேலே